நாங்க மோசமா விளையாடல.. குல்தீப்தான் செமையா பவுலிங் பண்றார்.. என்ன பண்ண?” – கிரேம் ஸ்வான் பேட்டி

0
104
Swann

மார்ச்-8. தற்போது தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுக்க, இந்திய அணி தற்பொழுது ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து இருக்கிறது. ஒன்பது விக்கெட்டுகள் கைவசம் இருக்க இன்னும் 83 ரன்கள் மட்டுமே இந்தியா பின்தங்கி இருக்கிறது.

நேற்றைய போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்று பேட்டிங் செய்வது என முடிவு செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கத்தை தந்தார்கள். 100 ரன்கள் எடுத்திருந்த பொழுது இங்கிலாந்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. அங்கிருந்து அடுத்து 118 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது.

- Advertisement -

இங்கிலாந்தின் முக்கியமான ஐந்து விக்கெட்டுகளை இந்திய சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் குறுகிய இடைவெளியில் கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு பெரிய சேதாரத்தை உண்டு செய்தார். அவர் ஏற்படுத்திய சரிவில் இருந்து இங்கிலாந்து அணியால் மீள முடியவே இல்லை. கடைசியில் பந்தை கையில் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்து அணியின் இன்னிங்சை உடனுக்குடன் முடித்து வைத்தார்.

இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தோல்வியும், இந்திய பந்துவீச்சாளர்களின் எழுச்சியும் இந்த தொடரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறை மீது பெரிய விமர்சனங்கள் இங்கிலாந்து தரப்பில் இருந்து கிளம்பி இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணியை காப்பாற்றும் விதமாக பேசக்கூடிய ஒருவராக கிரேம் ஸ்வான் மட்டுமே இங்கிலாந்து தரப்பில் இருக்கிறார்.

நேற்றைய இங்கிலாந்து அணியின் சரிவு குறித்து பேசி உள்ள கிரேம் ஸ்வாான் கூறும்பொழுது “உலகத்தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர் தன்னுடைய ஃபார்மில் உச்சத்தில் இருக்கிறார் என்பதிலிருந்து இதை பார்க்க வேண்டும். எனவே இங்கிலாந்து அணி சரணாகதி அடைந்து விட்டது என்று பார்க்க முடியாது. அவர்கள் அழுத்தத்திற்கு அடிபணிந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல முடியும்.

- Advertisement -

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் நிச்சயம் சிறப்பாக செய்ய முடியும் என்று தெரியும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நேரத்தில் உலகத் தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்களை பெற்றிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குல்தீப் யாதவ் கனவு போல பந்து வீசுகிறார்.

இதையும் படிங்க : “பந்தையே ரீட் பண்ண முடியல.. இதுல பாஸ்பால் வேற.. நீங்க குழந்தைங்களா?” – ஓவைஸ் ஷா இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது விமர்சனம்

முடிவில் இன்று இங்கிலாந்துக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒருநாள். ஆரம்பத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங், சீம் ஆன பொழுது இங்கிலாந்து விக்கெட் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி சமாளித்தது. அதற்குப் பிறகு சுழற் பந்துவீச்சாளர்கள் வந்ததும் விக்கெட்டுகள் சரிந்தது. போட்டியில் டாஸ் வென்று நன்றாக துவங்கி இப்படி நடந்து இருப்பது மிகவும் ஏமாற்றத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.