ரோகித் ஜடேஜா அபார சதம்.. சர்பராஸ் கான் அதிரடி அரைசதம்.. வலிமையான நிலையில் இந்தியா.. போராடும் இங்கிலாந்து

0
198
ICT

இங்கிலாந்துக்கு எதிராக துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் சரிவை சந்தித்து கடைசியில் நல்ல நிலையை அடைந்திருக்கிறது.

குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

புதிய பந்தில் கொஞ்சம் தாண்டினால் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்ற நிலையில் ஜெய்ஸ்வால் 10, கில் 0, ரஜத் பட்டிதார் 5 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இந்திய அணி 33 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இதற்கு அடுத்து அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து சரிவில் இருந்த இந்திய அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து வந்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடிக்க, தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்து 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை காப்பாற்றியது.

- Advertisement -

ரோகித் சர்மா வெளியேறியதும் அறிமுக வீரராக உள்ளே வந்த சர்பராஸ் கான் ஆட்டத்தில் தீ பறந்தது. உள்நாட்டு அணிகளை அடித்து துவைக்கும் அதே வேகத்தில், இங்கிலாந்து அணியை சர்பராஸ் கான் டீல் செய்தார்.

மிகச் சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்தில் முதல் போட்டியில் அரை சதம் அடித்து, ரவீந்திர ஜடேஜாவின் சதத்திற்காக இறுதியில் 62 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

இதற்கு அடுத்து ரவீந்திர ஜடேஜா சதம் அடித்தார். தற்பொழுது இந்திய அணி 86 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருக்கிறது. இறுதி வரை ஆட்டம் இழக்காத ரவீந்திர ஜடேஜா 110 ரன்கள், நைட் வாட்ச்மேன் ஆக உள்ளே வந்த குல்தீப் யாதவ் 1 ரன்னில் களத்தில் நிற்கிறார்கள்.

இதையும் படிங்க : 48 பந்தில் 50 ரன்.. பாஸ்பாலை மிரட்டும் சர்பராஸ்கான்.. அறிமுக போட்டியில் அதிரடி

இங்கிலாந்து தரப்பில் இந்த போட்டியில் சேர்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் மிகச் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். நாளை பேட்டிங் செய்ய இன்னும் ஆடுகளம் எளிதாக மாறும் என்று கூறப்படுகிறது, எனவே நாளை தொடர்ந்து விளையாடும் இந்திய அணி குறைந்தது மொத்தமாக 500 ரன்கள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.