“ப்ளீஸ் எங்களை இப்படி மட்டும் சொல்லாதிங்க.. நாங்க விளையாடும் பிளான் இதுதான்” – இங்கிலாந்து துணை கேப்டன் போப் பேச்சு

0
98
Pope

டெஸ்ட் கிரிக்கெட் உலகில் தற்பொழுது இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் பாஸ்பால் முறையை பற்றி தான் அவர்கள் எங்கு சென்றாலும் பெரிய அளவில் பேச்சுகள் இருந்து வருகிறது.

அவர்கள் கடைசியாக ஆசியாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் நாட்டிற்கு கடந்த முறை வந்தார்கள். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினார்கள்.

- Advertisement -

அந்த மூன்று போட்டிகளிலும் அவர்களுடைய ரன் ரேட் என்பது ஒரு ஓவருக்கு 6 ரன்கள் இருந்தது. இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ப்ரூக் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து அதிரடியாக சதம் அடித்திருந்தார். மேலும் இங்கிலாந்து மூன்று போட்டியையும் வென்று இருந்தது.

அவர்கள் ஆசியாவிற்கு வந்து இந்த அளவிற்கு தங்களுடைய அதிரடியான பேட்டி முறையை தொடர்ந்த காரணத்தினால், இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடும் முறைக்கு பாஸ்பால் என்கின்ற பெயர் நிலையானதாக மாறியது.

மேலும் இந்தியாவிற்கு வந்து இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை இங்கிலாந்து துணை கேப்டன் போப் அதிரடியாக விளையாடி வென்றார்கள். அவருடைய பேட்டிங் முறையும் பாஸ்பால் அணுகு முறையில்தான் இருந்தது. ஆனால் இப்பொழுது தங்களை அப்படி கூறக்கூடாது என இங்கிலாந்து அணியினர் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து துணை கேப்டன் போப் பேசும்பொழுது “இந்த அணியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் வித்தியாசமாக பேட்டிங் செய்கிறார்கள். இதன் காரணமாக நாங்கள் பாஸ்பால் விளையாடுகிறோம் என்று சொல்வதை அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் துவங்குவது தாக்கி விளையாடுவதைப் பற்றி கிடையாது. அழுத்தத்தை எப்படி ஆட்டத்திலிருந்து எடுப்பது என்பது பற்றியதுதான்.

இதையும் படிங்க : “வேகமா விளையாடுறது பெருமையா?.. இங்கிலாந்து பாஸ்பால் பாச்சா பலிக்காது” – புஜாரா பேச்சு

ஸ்டோக்ஸ் அனேகமாக தன்னுடைய ஆட்டத்தை தேவைக்கு தகுந்ததுபோல் மாற்றி இருக்கலாம். ஆனால் அணிக்கு தேவைப்படும் பொழுது அவரால் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியும் அளவுக்கு அவரிடம் திறமை இருக்கிறது. கடைசியாக லார்ட்சில் அப்படியாக 155 ரன்கள் எடுத்திருந்தார். எல்லா அழுத்தங்களும் அவர் மீது இருக்கும் பொழுது, அவர் போட்டியை வேறொரு நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடியவர்” என்று கூறியிருக்கிறார்.