“நாங்க பாஸ்பால்தான் விளையாடுவோம்.. ஆனா இந்தியா வேற பிளான் பண்ணுது” – ஒல்லி போப் ஆச்சரிய பேச்சு 

0
576
Pope

ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி மிகவும் படுபாதாளத்தில் இருந்தது. உள்நாடு வெளிநாடு என்று செல்லும் இடமெல்லாம் தோல்வியை சந்தித்தது.

இந்த நேரத்தில் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக பிரண்டன் அண்ட் மெக்கலம் இருவரும்வந்த பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் விளையாடி புதிய டெஸ்ட் கிரிக்கெட் பிராண்டை உருவாக்கினார்கள்.

- Advertisement -

இந்த முறைக்கு மீடியாக்கள் பாஸ்பால் என்ற பெயர் வைக்க, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு இங்கிலாந்துக்கு வெளியில் இருந்தும் ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். இதுவரையில் பாஸ்பால் முறையில் இங்கிலாந்து எந்தத் தொடரையும் இழந்தது கிடையாது.

இப்படியான சூழலில் இந்தியா வந்து முதல் டெஸ்ட் போட்டியை வென்றதும், இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. ஆனாலும் இங்கிலாந்து முன்னாள் வீரர்களுக்கு பாஸ்பால் முறையில் பெரிய உடன்பாடு கிடையாது.

இதற்கு அடுத்து இந்திய அணியிடம் இங்கிலாந்து அணி இரண்டு மோசமான தோல்விகளை அடுத்தடுத்து சந்திக்க, காத்திருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சனங்களால் துளைத்தெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒருபுறம் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களும் பாஸ்பால் அணுகுமுறையை விமர்சனப் பார்வையில் பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு ஆட்டம் கையில் இருந்த பொழுதும், தேவையில்லாமல் விளையாடி விக்கெட் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் கூறும் பொழுது “பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு கொஞ்சம் பின்னடைவுதான் என்றாலுமே கூட, கடந்த போட்டியில் முகமது சிராஜ் மிகச்சிறந்த முறையில் பதிவு செய்தார். ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு, சிறப்பான முறையில் செயல்படுவதற்கு அவர்களிடம் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

கடந்த டெஸ்ட் போட்டியில் ராஜ்கோட்டில் கடைசி இரண்டு நாட்கள் நாங்கள் விளையாடிய விதத்தில் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம். ஆனால் அதையெல்லாம் நாங்கள் அங்கேயே விட்டு விட்டோம். தங்கள் புதிய ஒரு டெஸ்ட் போட்டிக்கு உற்சாகமாக தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்கள் வழியில் எந்த தவறையும் பார்க்கவில்லை. எனவே நாங்கள் தொடர்ந்து எங்களுடைய வழக்கமான முறையில்தான் விளையாடுவோம்.

இதையும் படிங்க : 4வது டெஸ்ட்.. சர்பராஸ் போல கஷ்டப்பட்ட இளைஞர் அறிமுகமாக வாய்ப்பு.. ரோகித்துக்கு சிக்கல்

ஆடுகளத்தைப் பொறுத்தவரையில் ஒரு பக்கம் விரிசலாகவும் இன்னொரு பக்கம் நன்றாகவும் இருக்கிறது.மேலும் ஆடுகளத்திற்கு தண்ணீர் விடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அவர்கள் ஒரே வேகப்பந்து வீச்சாளரை வைத்துக்கொண்டு, அக்சர் படேலை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கூடுதல் சுழற் பந்துவீச்சாளரை அவர்கள் விளையாடலாம்” என புதிய கோணத்தில் கூறியிருக்கிறார்.