SA20.. 466 ஸ்ட்ரைக் ரேட்.. ஜேஎஸ்கே அணி கடைசி நொடியில் பிளே ஆப்.. ஐபிஎல் 2010 தோனியை ஞாபகப்படுத்திய போட்டி

0
461
JSK

ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள ஆறு அணி உரிமையாளர்கள் தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் பங்குபெறும் ஆறு அணிகளையும் வாங்கி இருக்கிறார்கள்.

நேற்று நடைபெற்ற போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

பேட்டிங் செய்ய வந்த டர்பன் அணியின் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மேத்யூ பிரட்ஸ்கி 9, டோனி டி சோர்சி 15, பிரிட்டோரியஸ் 1 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து வந்த ஜேஜே.ஸ்மட்ஸ் 55(34), வியான் முல்டர் 59(40), ஹென்றி கிளாஸன் 40(17) என அதிரடியாக ரன்கள் எடுக்க ஆறு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணி சேர்த்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் லிசார்ட் வில்லியம்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் நிலையில் பேட்டிங் செய்ய வந்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் அதிரடியாக 27 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ப்ளாய் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் எடுத்தார். மொயின் அலி 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்கள்.

இந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களுக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. மேட்சன் 29 பந்துகளில் 44 ரன்கள், டோனவன் பெரிரா மூன்று பந்துகளில் 14 ரன்கள் எடுக்க ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

மேலும் இந்த தொடரில் பொல்லார்ட் தலைமையிலான கேப் டவுன் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தோற்று தொடரை விட்டு வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது.