பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ஷர்துல் தாக்கூர், தோனியை பற்றி கேட்ட பத்திரிகையாளரிடம் கோபமாக பதில் அளித்திருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக திகழ்ந்து வரும் ஷர்த்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியே இருந்தபோது மாற்று வீரராக உள்ள எடுத்துவரப்பட்டார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வந்த இவர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மைதானங்களில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பிறகு, அணியில் நிரந்தர இடம் கொடுக்கப்பட்டது.
மேலும் இந்தாண்டு தென்னாபிரிக்க அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரின் ஒரு இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி மேலும் நம்பிக்கை அளித்தார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியா வந்த பிறகு டி20 போட்டிகளில் இவரது வாய்ப்பு வெகுவாக குறைந்திருக்கிறது. இதனால் டி20 உலக கோப்பை தொடரிலும் இவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இது குறித்து தனது வருத்தத்தையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அதே பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தோனியுடன் விளையாடாததால் அவரை மிஸ் செய்கிறீர்களா? எனக்கேட்டபோது சற்று கோபமாகவும் பதில் அளித்திருக்கிறார். ஷர்துல் தாக்கூர் கூறுகையில், “தோனியை எல்லோரும் மிஸ் செய்கிறோம். அவரைபோன்ற அனுபவம் கொண்டவர்கள் கிடைப்பது அரிது. 300-க்கும் மேற்பட்ட சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 90-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஏகப்பட்ட அனுபவம் கொண்டிருக்கும் இவருடன் சமகாலத்தில் நானும் விளையாடியது பெருத்த மகிழ்ச்சியையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. அவருடன் சமீப காலமாக விளையாடாதது சற்று வருத்தமாக இருக்கிறது. நான் நிறைய மிஸ் செய்கிறேன்.” என்றார்.
ஷர்துல் தாக்கூர், தோனியின் தலைமையில் 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் 2018-21 காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.