ODI உலக கோப்பை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டியில் நடக்க இருக்கும் மாஸ் சம்பவம்.. வெளிவந்த ரிப்போர்ட்!

0
173
Rohit

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன!

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சந்திக்க இருக்கிறது. இதற்கு அடுத்து மிக முக்கியமான போட்டியான பாகிஸ்தான் அணி உடன் மோதும் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர் 14ஆம் தேதி இந்திய அணி விளையாடுகிறது!

- Advertisement -

சில வாரங்களுக்கு முன்னால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியை விட, இந்தியா ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும், காரணம் போட்டியின் தரம் பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும் இதுவரை இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலக கோப்பையில் ஒரு தலைப்பட்சமாகவே வென்று வந்திருக்கிறது போட்டி இல்லை என்றும் கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்புகளை உருவாக்கியது. எப்பொழுதும் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டிக்குத்தான் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று பதிலடி தரப்பட்டது. மேலும் இந்த முறை பாகிஸ்தான் இந்தியாவை குஜராத்தில் வைத்து வீழ்த்தும் என்றும் சவால் விடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் போட்டியில் சச்சின் மற்றும் டிவிலியர்ஸ் இருவர் படைத்திருக்கும் சாதனை உடைவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. இதை உடைக்கக் கூடிய வாய்ப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

அதாவது என்ன உலகச்சாதனை என்றால் உலகக் கோப்பை தொடர்களில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் கண்களை தொட்ட வீரர் என்ற சாதனைதான். சச்சின் மற்றும் ஏபி.டிவில்லியர்ஸ் இருவரும் 20 இன்னிங்ஸ்களில் உலகக் கோப்பை தொடர்களில் ஆயிரம் ரன்களை கடந்து இருக்கிறார்கள்.

தற்பொழுது ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 18 உலகக்கோப்பை இன்னிங்ஸ்களில் 992 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் மேலும் எட்டு ரன்கள் இந்திய அணி உடன் எடுக்கும் பொழுது புதிய உலகச் சாதனை படைப்பார்.

அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்வதாக இருந்து 22 ரன்கள் எடுத்தால், அவரது சாதனையை டேவிட் வார்னரால் கூட சமன் செய்ய முடியாது. ஏனென்றால் தற்பொழுது ரோகித் சர்மா 17 உலகக்கோப்பை இன்னிங்ஸ்களில் 978 ரன்கள் எடுத்திருக்கிறார். எனவே வாரனரால் இந்த சாதனையை உடைக்க முடியாது.

இந்தக் காரணத்தால், இந்தியா ஆஸ்திரேலியா உலக கோப்பையில் மோதும் போட்டியில் சச்சின் மற்றும் டிவிலியர் சாதனையை வார்னர் இல்லை ரோஹித் சர்மா யார் முறியடிப்பார்கள் என்கின்ற ஒரு ரேஸ் நடக்க இருப்பதால் இது சுவாரசியமான ஒன்றாக தற்பொழுது மாறி இருக்கிறது.