ODI ரேங்கிங் பட்டியல்.. உடைந்த 950 நாட்கள் ரெக்கார்ட் .. கில் சிராஜ் NO.1.. கோலி ரோகித் உயர்வு.. அதிரடி மாற்றங்கள்!

0
2760
Gill

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தற்பொழுது இந்தியாவில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஐசிசி தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பல மிக முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 950 நாட்களுக்குப் பிறகு பாபர் அசாமை முதலிடத்தில் இருந்து கீழே இறக்கி இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

தற்பொழுது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 830 புள்ளிகளுடன் சுப்மன் கில் முதல் இடத்தில் இருக்கிறார். பாபர் அசாம் 824 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். குயின்டன் டிகாக் 771 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும், விராட் கோலி 770 புள்ளிகள் உடன் நான்காம் இடத்திலும், டேவிட் வார்னர் 743 புள்ளிகள் உடன் ஐந்தாம் இடத்திலும், ரோகித் சர்மா 739 புள்ளிகள் உடன் ஆறாம் இடத்திலும் இருக்கிறார்கள்.

மீதி நான்கு இடங்களில் தென் ஆப்பிரிக்காவின் வான்டர் டேசன், அயர்லாந்தின் ஹாரி டெக்டர், தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசன், இங்கிலாந்தின் டேவிட் மலான் என முதல் 10 இடங்களுக்குள் வருகிறார்கள்.

- Advertisement -

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் முகமது சிராஜ் 709 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 694 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும், ஆடம் ஜாம்பா 662 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும், இந்திய வீரர் குல்தீப் 661 புள்ளியுடன் நான்காம் இடத்திலும் இருக்கிறார்கள்.

மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா 654 புள்ளிகள் உடன் எட்டாமிடத்திலும், முகமது சமி 635 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். முதல் 10 இடங்களில் நான்கு இந்திய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த வாரம் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் பேட்டிங்கில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் பந்துவீச்சில் பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி இருவரும் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இதே போல் இந்திய அணியின் கில் மற்றும் சிராஜ் இருவரும் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்கள்!