NZvsSA.. 2வது இன்னிங்ஸிலும் வில்லியம்சன் சதம்.. 10 முறையில் 6 சென்ஞ்சுரி.. மாஸ் பேட்டிங்

0
142
Williamson

தென் ஆப்பிரிக்காவில் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகின்ற காரணத்தினால், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு நியூசிலாந்துக்கு, அனுபவமற்ற வீரர்களைக் கொண்ட ஒரு அணியை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸில் ரச்சின் ரவீந்தரா 240, கேன் வில்லியம்சன் 118 ரன்கள் குவிக்க, நியூசிலாந்து அணி 511 ரன்கள் மொத்தமாக குவித்து மிரட்டியது.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாட வந்த அனுபவமற்ற தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் கீகன் பீட்டர்சன் 45 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லாதம் 3, டெவோன் கான்வே 29, ரச்சின் ரவீந்தரா 11 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

ஆனால் ஒரு முனையில் நின்று விளையாடிய கேன் வில்லியம்சன் இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். சீக்கிரத்தில் இரண்டாவது இன்னிங்ஸை முடித்து தென் ஆப்பிரிக்க அணியை விளையாட வைக்க வேண்டும் என்கின்ற அவசரம் அவரது பேட்டிங்கில் தெரிந்தது.

அதிரடியாகவும் அதே நேரத்தில் நேர்த்தியாகவும் விளையாடிய கேன் வில்லியம்சன் தன்னுடைய 31 வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அவருக்கு சதம் வந்திருக்கிறது. முடிவில் அவர் 132 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 528 ரன்கள் முன்னிலையும் பெற்று இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருக்கின்ற காரணத்தினால் எப்படியும் இந்த போட்டியை தென் ஆப்பிரிக்க அணியால் வெல்ல முடியாது என்கின்ற கட்டம் வந்துவிட்டது.

நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். அதில் ஒரு இரட்டை சதமும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம் கீழே.

  • 132(282).
  • 1(11).
  • 121*(194).
  • 215(296).
  • 104(205).
  • 11(24).
  • 13(14).
  • 11(24).
  • 118(289).
  • 109(132).