தோனி ஐபிஎல் விட்டு போகக்கூடாது.. இந்த ஒரு காரணத்துக்காக அடுத்த வருஷம் விளையாடனும் – அம்பதி ராயுடு வேண்டுகோள்

0
237
Ambati

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான முக்கிய போட்டியில் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இதன் காரணமாக 42 வயதான மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடர் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அம்பதி ராயுடு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் டோனி தசைக்கிழிவு காயத்துடன் மிகவும் போராடிக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் சர்வதேச அனுபவம் கொண்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கான்வே ஆரம்ப முதலே சிஎஸ்கே அணிக்கு காயத்தின் காரணமாக கிடைக்கவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக தோனி தொடர்ந்து விக்கெட் கீப்பராக சிஎஸ்கே அணிக்கு விளையாட வேண்டி இருந்தது. இல்லையென்றால் அவர் ஓய்வு எடுத்து இருப்பார் என சிஎஸ்கே அணி வட்டாரங்கள் கூறியது. இன்னும் ஒரு விக்கெட் கீப்பராக இந்திய அண்டர் 19 வீரர் மட்டுமே இருந்தார். ஆனால் தோனி களத்தில் இருப்பது ருதுராஜுக்கு உதவியாக இருக்கும் என தொடர்ந்து தோனி விளையாடினார்.

இப்படி காயத்துடன் விளையாடிய காரணத்தினால் அவரால் பேட்டிங் வரிசையில் மேலே வர முடியவில்லை. இதேபோல் ஆர்சிபி அணிக்கு எதிராக போட்டியை முடிக்க வேண்டிய வாய்ப்பிலிருந்து தோனி அதைத் தவிர விட்டார். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் நிலவி வருகிறது.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறும் பொழுது “தோனி இன்னும் ஒரு ஐபிஎல் சீசன் கட்டாயம் விளையாட வேண்டும். அவர் இந்த முறையில் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறக் கூடாது. இது அவருக்கு கடைசி சீசனாக அமையக்கூடாது. அவர் அடுத்த சீசனில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும். அவர் ஒரு தலைமுறைக்கான வீரர். அவர் ஒரு தலைமுறைக்கான மனிதர். எனவே அவருக்கான முடிவு மிகச் சரியாக இருக்க வேண்டும்” எனப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : மழையால் ராஜஸ்தானுக்கு நடந்த சோகம்.. ஹைதராபாத்துக்கு லக்.. பிளே ஆஃப் சுற்று முழு விபரங்கள்

அதே சமயத்தில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடக்க இருக்கின்ற காரணத்தினால், எத்தனை வீரர்களை தக்கவைக்க பிசிசிஐ அனுமதிக்கிறது என்பது குறித்து தெரியவில்லை. எனவே தொடர்ந்து தோனியை சிஎஸ்கே அணியில் தக்க வைத்து விளையாடுவார்களா? என்பது யாருக்கும் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.