லாரா யுவராஜ் சிங்கின் கலவை இந்த பையன்.. ஜெய்ஸ்வாலுக்கு செஞ்சத இவருக்கும் செய்யுங்க – மைக்கேல் வாகன் பேட்டி

0
1456
Vaughan

நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச் சிறந்த விஷயமாக அபிஷேக் ஷர்மா கிடைத்திருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் கிடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவை இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவத்திலும் விளையாட வைக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகள் மட்டும் விளையாடி அபிஷேக் சர்மா 467 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் அவர் எடுத்துள்ள ரன்கள் பெரிய விஷயம் கிடையாது. ஆனால் அவர் 209 என்கின்ற பிரம்மாண்ட ஸ்டிரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்து இருக்கிறார் என்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா சந்திக்கும் பந்துகளை விட இரண்டு மடங்கு ரன்களை அளித்திருக்கிறார். இதன் காரணமாக ஹைதராபாத் அணிக்கு பவர் பிளேவில் பெரிய அளவில் ரன்கள் கிடைத்தது. இதனால் அவர்கள் ஆட்டத்தை எடுத்ததும் தங்களின் கண்ட்ரோலில் கொண்டு வந்து விடுகிறார்கள். இன்று அவர்கள் பிளே ஆப் சுற்றில் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் விளையாடிய இந்த அதிரடி ஆட்டம் தான் காரணமாக இருக்கிறது.

அபிஷேக் ஷர்மா குறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதும் உடனே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வெற்றி பெற்றவராக இருக்கிறார். அபிஷேக் சர்மாவாலும் இதைச் செய்ய முடியும்.

- Advertisement -

அபிஷேக்சர்மாவுக்கு நல்ல பேட்டிங் டெக்னிக் கிடைத்திருப்பதால் அவர் இந்திய அணிக்காக மூன்று வடிவத்திலும் விளையாட முடியும். அவர் பிரையன் லாரா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரிடம் இருந்த வில்லோ ஸ்விங்கை பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க : தோனி ஐபிஎல் விட்டு போகக்கூடாது.. இந்த ஒரு காரணத்துக்காக அடுத்த வருஷம் விளையாடனும் – அம்பதி ராயுடு வேண்டுகோள்

ஜெய்ஸ்வாலைப் பொறுத்தவரை அவர் ஒரு ஆச்சரியமான கதை. சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்ததிலிருந்து அவர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். அவர் விளையாடுவதை பார்க்கும் பொழுது 15 வருடம் கிரிக்கெட் விளையாடியவர் போன்று தோன்றியது. தற்பொழுது அபிஷேக் ஷர்மாவுக்கும் அது வெகு தொலைவில் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -