“இனி இந்த 30 வயது பவுலர்தான் இந்தியாவுக்கு டி20ல..!” – ஜாகிர் கான் உறுதியான கணிப்பு!

0
7457
ICT

தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். விளையாடிய இரண்டு போட்டிகளிலும் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களாக முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இருக்கிறார்கள்.

நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளும் பந்துவீச்சு சாதகமான மைதானங்களாக இல்லை. மேலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி பந்து வீசிய பொழுது பேட்டிங் செய்ய மிகவும் சாதகமாக இருந்தது.

இந்த நிலையில் போட்டியில் முதலில் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார்கள். பின்பு பிரசித் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் இருவரும் முக்கிய விக்கட்டுகளை கைப்பற்றி மொத்தமாக ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார்கள்.

- Advertisement -

இந்திய வேகப்பந்துவீச்சு துறையை பற்றி பேசிய முன்னாள் வேகபந்துவீச்சு லெஜென்ட் ஜாகிர் கான் கூறும் பொழுது “முகேஷ் குமார் தனது பந்துவீச்சின் மூலமாக மிகவும் ஈர்க்கக் கூடியவர். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவர் எந்த மாதிரியான ரோலுக்கு தயாராகி வருகிறார் என்கின்ற தெளிவு உங்களுக்கும் அவரைப் பார்த்தால் கிடைக்கும்.

அவர் தனது சிந்தனை செயல்முறையில் மிகவும் தெளிவாக இருக்கிறார். கடினமான கடைசி கட்ட ஓவர்களை வீச வேண்டி இருக்கும் என்று அவருக்கு தெரியும். அவரிடமிருந்து யார்க்கர்கள் மிக நன்றாக வருகின்றன. இது அருமையான ஒன்று.

பிரசித் கிருஷ்ணா முதல் ஆட்டத்தில் கடினமாக இருந்து பின்பு திரும்ப வந்து இரண்டாவது போட்டியில் விக்கெட் எடுத்திருக்கிறார். அவர் தன்னுடைய வேகத்தின் மூலமாக பேட்ஸ்மேனை அடிக்க வைக்கிறார் இல்லை விக்கெட் எடுக்கிறார். அவர் அப்படியான பந்துவீச்சாளர். விக்கெட் எடுப்பது எப்பொழுதும் நம்பிக்கையே அதிகரிக்கும்.

அணி நிர்வாகம் யாருடைய ஓவர்களை கடைசிக்கு தள்ளுகிறது என்று பார்க்க வேண்டும். இந்த வகையில் அர்ஸ்திப் மூன்று ஓவர்களை கடைசிக்கு இந்திய அணி நிர்வாகம் வைக்கிறது. எனவே அவரையே தன்னுடைய பந்துவீச்சாளராக அவர்கள் பார்க்கிறார்கள். அவர் மீது அதிக பொறுப்பு சுமத்தப்படுகிறது!” என்று கூறியிருக்கிறார்!