“இனி இந்த 25 வயது இளம் இந்திய வீரருக்கு வாய்ப்பு கஷ்டம்” – பிசிசிஐ தரப்பில் கசிந்த தகவல்!

0
1256
ICT

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற இருக்கின்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு நேற்று அணி அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த இந்திய அணியில் நிறைய ஆச்சரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த முடிவுகள் எப்படியான பலனை தரும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் இதிலிருந்து டி20 உலக கோப்பைக்கு எப்படியான இந்திய அணி செல்லும் என்கின்ற ஒரு தெளிவான பார்வை வெளியில் இருப்பவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக தலைமை தாங்குவார், விராட் கோலி விளையாடுவார், ரோகித் சர்மா உடன் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் களம் இறங்குவார், மூன்றாவது துவக்க வீரராக ஐபிஎல் தொடரை வைத்து கில் இல்லை ருதுராஜ் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அதிரடியாக எடுக்கப்பட்ட இரண்டு முடிவுகளாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் இருவரும் வெளியேற்றப்பட்டது அமைந்திருக்கிறது. இதன் மூலம் இவர்கள் இருவருமே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற மாட்டார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக இதில் அதிகம் பாதிப்படையக் கூடிய வீரராக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிஷான் இருக்கிறான். மேற்கொண்டு இரண்டாவது விக்கெட் கீப்பராக இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடரிலும் இவர் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று தெரிய வருகிறது.

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தி இருந்தார். இதன் காரணமாக கேஎல் ராகுல் மற்றும் சஞ்சீவ் சாம்சன் இருவர்தான் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக தொடர்வார்கள் என்று தெரிகிறது. எனவே ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இசான் கிஷானுக்கு இடம் கடினம்.

மேலும் ரோகித் சர்மா தற்பொழுது துவக்க வீரராக அணிக்கு திரும்பி இருப்பதாலும், ஜெய்ஸ்வால், கில், ருதுராஜ் போன்றவர்கள் துவக்க வீரர்களாக ஏற்கனவே இருப்பதாலும், விக்கெட் கீப்பர் மற்றும் துவக்க வீரரான இஷான் கிஷானுக்கு இந்த வடிவத்திலும் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம். எனவே அவர் மூன்று வடிவ இந்திய அணியிலும் மாற்று வீரராக இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் செய்யப்பட்டு இருக்கிறார். இனி அவருடைய இடம் பெரிய கேள்விக்குறியாக மாறும்.

இசான் கிசான் குறித்து பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும் பொழுது “இஷான் கிஷான் விளையாடாமலே அணி உடன் தொடர்ந்து இருப்பதில் மகிழ்ச்சி அடையவில்லை. அவர் தற்பொழுது விடுமுறையில் ஓய்வில் இருக்கிறார். எப்படி இருந்தாலும் இவரைத் தாண்டி தேர்வுக்குழு பார்க்கிறது. அவர் தேர்வு செய்யப்பட்டால்தான் சுவாரசியமாக இருக்கும. இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் கேஎஸ்.பரத்துதான் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்கு திரும்புவார்!” என்று கூறியிருக்கிறார்!