இனி ஹர்திக் பாண்டியா தான்; ரோகித் செய்யாததை செய்கிறார்; பார்த்திவ் படேல் அதிரடி!

0
360
PP

தற்பொழுது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி மூன்று T20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. வெல்லிங்டனில் நடக்கவிருந்த முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாம் ஆட்டத்தில் “சூர்யக் குமார் யாதவ்’ன் அபார ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி குறித்து பல்வேறு கிரிக்கெட் பண்டிதர்களும் தங்களுடையக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள இந்தியாவின் முன்னாள் ‘விக்கெட் கீப்பர்’ மற்றும் பேட்ஸ்மேனும்,’சி எஸ் கே’ அணியின் முன்னாள் துவக்க பேட்ஸ்மேனுமான ‘பார்திவ் படேல்’, கேப்டன் ‘ஹர்திக் பாண்டியா’ வின்  ஆளுமை திறனையும் இந்தியாவின் இளம் ஆல் ரவுண்டர் என் அழைக்கப்படும் ‘தீபக் ஹூடா’வையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள அவர், “ஒரு பேட்ஸ்மேனால் பந்து வீச முடியும் என்றால் அவருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்குவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் அதை தான் ஹர்திக் பாண்டியாவும் செய்துள்ளார் “

மேலும் அவர் “தீபக் ஹூடா இந்தியாவின் உலக கோப்பை போட்டிக்கான அணியில் அவருடைய ஆல் ரவுண்டர் திறமையால் தான் இடம்பெற்று இருந்தார்,ஆனாலும் இதற்கு முன் அவர் ஆடிய எந்த ஆட்டத்திலும் அவர் பந்து வீச அழைக்க படவில்லை ,ஆனால் நேற்றைய போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவரை பந்து வீச அழைத்தார்.தீபக் ஹூடாவின் சிறப்பான பந்து வீச்சால் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய ஆற்றலை பதிவு செய்தார்.”

“இந்த அணுகுமுறையின் மூலம் தான், ஒரு வீரரின் உண்மையான திறன் வெளிப்படும் மேலும் அவரால் நெருக்கடியான சூழல்களில் சிறப்பாக பந்து வீச முடியுமா ?என கேள்விக்கு இது போன்ற போட்டிகளில் வாய்ப்பு அளிப்பதன் மூலம் பதில் அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்”.

- Advertisement -

இந்திய அணியின் பந்து வீச்சு அணுகுமுறை குறித்தும் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் ‘பார்திவ் படேல்’ இது குறித்து  “அவர் இந்திய அணி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பந்துவீச்சில் தாக்குதல் பாணியில் ஆட்டத்தை கடைப்பிடித்தது,போட்டியின் முதல் பந்தில் இருந்தே விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும் என்று இந்திய வீரர்கள் செயல் பட்டது, அவர்களின் ஆட்டமுறையில் ஒரு முக்கிய மாற்றமாக நான் பார்க்கிறேன் ,மேலும் இந்த போட்டியில் ‘ஹர்திக் பாண்டியா’, அணியை வழி நடத்திய விதம் பாராட்டும் விதமாக இருந்தது. இந்திய அணி அடுத்த உலக கோப்பையை நோக்கி முன்னேறி செல்வதாக நான் பார்க்கிறேன் ,”என்று இந்திய அணுகுமுறை குறித்தும் ஹர்திக் பாண்டியா குறித்தும் பேசியுள்ளார் .

இந்திய அணியின் இந்த ஆட்ட அணுகுமுறையும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் அணுகுமுறையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஹர்திக் பாண்டியா தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வெற்றி வாய்ப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறார் .