“இது அதுக்கான நேரம் இல்ல”.. சச்சின் பேச்சுக்கு சர்துல் தாக்கூர் மறைமுக எதிர்ப்பு

0
279
Shardul

நேற்று துவங்கிய ரஞ்சி டிராபியின் இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்த மும்பை, அதற்கு அடுத்து 224 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. சர்துல் தாக்கூர் கடைசி நேரத்தில் 75 ரன்கள் அதிரடியாக எடுத்த இந்த ரன் வந்தது.

மும்பை அணியில் அனுபவ வீரர்களான கேப்டன் ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்கள். இது குறித்து நேற்று பேசியிருந்த சச்சின் டெண்டுல்கர் மும்பை பேட்ஸ்மேன்கள் திடீரென சிறு பிள்ளைகள் போல விளையாடினார்கள் என்று விமர்சனம் செய்திருந்தார்.

- Advertisement -

நேற்றைய போட்டி முடிந்து ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசி இருந்த சர்துல் தாக்கூர், அவர்கள் குறித்த விமர்சனங்களுக்கு கொஞ்சம் காட்டமாகவே தன் பாணியில் பதிலளித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து சர்துல் தாக்கூர் கூறும் பொழுது “ரகானே இந்த சீசன் முழுவதும் ரன்கள் எடுக்கவில்லை. இது ஒரு கட்டம் என்கின்ற காரணத்தினால் அவரை நாம் குறை கூற முடியாது. இதைத்தான் நான் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் சொல்லுவேன். இவர்கள் இருவருமே மும்பை மற்றும் இந்தியாவிற்கு சிறந்த மேட்ச் வின்னர்கள்.

- Advertisement -

இப்போது அவர்களின் நேரம் இல்லை. அவர்களை விமர்சிப்பதை விட அவர்களை ஆதரிக்க வேண்டிய நேரம் இது. ஏனென்றால் யாரையும் யாரும் விமர்சிப்பது மிகவும் எளிதானது.

ரகானே பேட்டிங்கில் ரன்கள் எடுக்கவில்லை ஆனால் ஃபீல்டிங்கில் அவர் சிறப்பாக இருக்கிறார். மும்பை அணிக்காக 19 வயது 23 வயதில் விளையாடுபவர்களிடம் கூட ரகானேவிடம் இருக்கும் மனோபாவம் கிடையாது. அவரை நீங்கள் ஸ்லிப்பில் பார்க்கலாம். 80 ஓவர்கள் பீல்டிங் செய்தாலும் கூட அவர் துள்ளிக்குதித்து பந்தை பிடிப்பார்.

ஸ்ரேயாஸ் மைதானத்தில் ஒரு புலியை போல சுற்றி வருகிறார். தன்னிடம் இருக்கும் அனைத்தையும் முழுமையாக களத்தில் அவர் அணிக்கு தருகிறார். ட்ரெஸ்ஸிங் ரூமில் இருவருமே ரோல் மாடலாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 80-5.. சாம்பியன் என நிரூபித்த ஆஸி.. நியூசி செய்த தவறு.. பாயிண்ட்ஸ் டேபிள் பரிதாபம்

நான் எப்பொழுதும் கடினமான சூழ்நிலைகளில் விளையாட விரும்புகிறேன். பால்காரில் இருந்து மும்பைக்கு கிரிக்கெட் கிட் பேக்குடன் ரயிலில் வெகு தூரம் பயணித்து வந்து வாழ்ந்த வாழ்க்கை எளிதானது கிடையாது. அது என்னை கடினமாக்கி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -