“நோட் பண்ணிக்கோங்க.. ரொம்ப ஆபத்தான பந்து வீச்சாளரா இந்த இந்திய வீரர் மாறப் போறார்!” – ராபின் உத்தப்பா அதிரடியான கணிப்பு!

0
1764
ICT

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இன்று நடைபெறும் போட்டிக்கு இந்திய நட்சத்திர வீரர்கள் திரும்பியிருக்கிறார்கள். மேலும் சில வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருடைய இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாட வைக்கப்படுகிறார். மேலும் சொந்த காரணங்களுக்காக வீட்டிற்கு சென்று இருந்த பும்ரா திரும்பி இருக்கிறார்.

அதே சமயத்தில் இந்திய அணிக்கு ஐந்தாவது பந்துவீச்சாளராக எட்டாவது இடத்தில் பார்க்கப்படுகிற வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூர் சொந்த காரணங்களுக்காக வீடு திரும்பியிருக்கிறார்.

- Advertisement -

இப்பொழுது உலகக் கோப்பைக்கு இந்திய அணியை கட்டமைப்பதில் அக்சர் படேல் மற்றும் சர்துல் இருவரது இடங்கள் மட்டும்தான் கேள்விக்குறியாக இருக்கின்றது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில் “அக்சர் படேலை இந்திய அணி தவறவிட்டால், அஸ்வின் தான் இந்தியா அணிக்கு முதல் தேர்வாக இருப்பார். இந்தியாவில் அவரது அனுபவத்தால் அவர் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளராக மாறப் போகிறார்.

அஸ்வின் ஒரு உலகத்தரமான வீரர். அவர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஏமாற்றுவது வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஷர்துல் தாக்கூர்தான் இந்தியாவுக்கு கவலையாக இருக்கலாம்.

சர்துல் தாக்கூர் விக்கெட்டுகள் எடுக்கிறார். அதே சமயத்தில் அவர் நிறைய ரன்களை கசிய விடுகிறார். அவர் ரன்களை கசிய விட்டு விக்கெட் எடுக்காத போது மிகவும் கவலையான விஷயமாக அது அமையும்!” என்று கூறியிருக்கிறார்!