சச்சின் டெண்டுல்கர் இல்லை ரிக்கி பாண்டிங் இல்லை ; நான் சந்தித்ததிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான் – பிரெட் லீ பெருமிதம்

0
5376
Brett Lee

உலக அளவில் சிறப்பாக அதே நேரத்தில் மிகவும் வேகமாகவும் பந்துவீச கூடிய வீரர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பிரெட் லீ. கடந்த 2012ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடினார். தற்போது ஓமன் நாட்டில் நடந்த லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில் இவர் பங்கேற்று விளையாடினர். இவர் விளையாடிய வேர்ல்ட் ஜெயின்ட்ஸ் அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது. பிரெட் லீ உடன் பீட்டர்சன், அக்தர், ஜெயசூர்யா போன்ற பல முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர்.

இதில் பிரெட் லீ முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரிடம் பேசும் போது தான் சந்தித்திலேயே சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்று கூறியுள்ளார். மேலும் நான் யாருக்கு பத்தி பேச விரும்பவில்லை என்றும் யார் பந்துவீச்சை தான் எதிர் கொள்ள விரும்பவில்லை என்றும் பிரெட் லீ பேசியுள்ளார்.

- Advertisement -

பிரெட் லீ பேசும்போது இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு தாம் பந்து வீச விரும்புவதில்லை என்று பேசியுள்ளார். அவர் சிறந்த பேட்டிங் வீரர் என்பதால் தன்னுடைய பந்துவீச்சை எளிதாக சமாளித்து விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கர் சிறந்த டெக்னிக்குடன் விளையாடியதாக கூறியுள்ளார். இருந்தாலும் பிரட் லீ டெண்டுல்கரை 14 முறை அவுட் ஆக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சந்திக்க விரும்பாத பந்துவீச்சாளர் யார் என்று கேட்ட கேள்விக்கு இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை கூறியுள்ளார். தான் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள விரும்புவதில்லை என்றும் அதனால் முரளிதரன் தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்று பேசியுள்ளார்.

அதேபோல தென்னாபிரிக்கா அணியைச் சேர்ந்த முன்னாள் ஆல்ரவுண்டர் சாட் காலிஸ் தான் அவர் சந்தித்ததிலேயே சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்று பிரட் லீ கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது தான் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக விளையாடுவதை தான் விரும்புவதாகவும் அதனால் ஜாக் காலிஸ் சிறந்த ஆல்ரவுண்டரோடு இல்லாமல் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்தவர் என்று பேசியுள்ளார் பிரெட் லீ. அடுத்து ரோட் சேஃப்டி கிரிக்கெட் தொடரில் வெற்றி விளையாடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.