இந்தியாவுல விளையாடல.. ஆனா கண்டிஷன் தெரியும்.. ஐபிஎல்தான் காரணம்.. உளவு பார்த்தது எப்படி? – ஷாகின் ஷா அப்ரிடி வெளியிட்ட மாஸ்டர் பிளான்!

0
392
Shaheen

இந்த வருடம், அடுத்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி, அதற்கடுத்த நவம்பர் 19ஆம் தேதி வரையில், இந்தியாவில் முதல்முறையாக 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது!

நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகவும் நீண்ட ஒரு தொடராக அமையும். ஏனென்றால் பத்து அணிகள் கலந்து கொள்ள, ஒவ்வொரு அணியும் மற்ற அணி உடன் ஒருமுறை மோத, லீக் சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் ஒன்பது போட்டிகள் கிடைக்கும்.

- Advertisement -

எனவே உலகக் கோப்பைத் தொடர் இவ்வளவு நீண்டதாக இருப்பதால், முதல் முறை வருகின்ற 15 பேர் கொண்ட அணி அப்படியே தொடரும் என்கின்ற உத்தரவாதம் கிடையாது. ஒரு நாள் கிரிக்கெட் வடிவம் என்பதாலும், ஒன்பது போட்டிகளுக்கும் பயணப்பட்டு விளையாட வேண்டி இருப்பதாலும், வீரர்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்வார்கள்.

மிகக் குறிப்பாக கலந்து கொள்ளும் மற்ற எல்லா அணிகளும் ஒன்பது லீக் போட்டிகளை எட்டு மைதானங்களில் விளையாட, உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா மட்டும் ஒன்பது மைதானங்களில் விளையாடுகிறது. மேலும் இந்தியாதான் மிக அதிக கிலோமீட்டர் பயணம் செய்து விளையாடுகிறது. உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணிக்கு எந்தவிதமான எந்தவிதமான சலுகையும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இன்னொரு பக்கத்தில் உள்நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடக்கின்ற காரணத்தினால், இந்திய அணிக்குப் பழக்கப்பட்ட சூழ்நிலை என்பதால், உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக எல்லோராலும் கணிக்கப்படுகிறது

- Advertisement -

அதே சமயத்தில் பெரிய கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் எல்லோருமே, வருடத்திற்கு இரண்டு மாதம் இந்தியாவில் தங்கி இருந்து, ஏறக்குறைய எல்லா மைதானங்களிலும் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு செல்கிறார்கள். ஐபிஎல் தொடர் வந்ததற்குப் பிறகு இந்தியாவிற்கு உள்நாட்டு சாதகம் என்று எதுவும் கிடையாது.

அதே சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேரடியான போட்டிகளில் விளையாடுவது இல்லை. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் தொடரில் அனுமதிக்கவும் இல்லை. எனவே அவர்களுக்கு இந்திய சூழல் புதிதாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இது குறித்து கூறியிருக்கும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி “ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ள அனைத்து வீரர்களுடனும் நாங்கள் இது சம்பந்தமாக கலந்துரையாடி இருக்கிறோம். அவர்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். ஒருவேளை அப்படி இல்லாவிட்டால் கூட, நாங்கள் நல்ல லென்த்தில் அடித்து பவுலிங் செய்வோம். நாங்கள் நம்பர் 1 அணியாக நன்றாகச் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் முழுமையாகத் தயாராகி விட்டோம்!” என்று கூறி இருக்கிறார்!