“ரோகித் மட்டுமில்ல.. எல்லாரும் சரியா இருக்க காரணம் விராட் கோலிதான்!” – இந்திய பயிற்சியாளர் அதிரடி தகவல்!

0
191
Virat

இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் விராட் கோலி கேப்டனாக இருந்த பொழுது, இந்திய அணியின் அணுகுமுறை என்பது அச்சமற்றதாக இருந்தது. களத்தில் இந்திய வீரர்கள் காட்டிய மகிழ்ச்சி மற்றும் ஆக்ரோஷம் எதிரணிகள் விரும்பத்தகாத ஒன்றாக இருந்தது.

விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் புகுத்திய ஒரு புதிய கலாச்சாரம் இன்று மொத்த இந்திய கிரிக்கெட்டும் நல்ல திசையில் பயணிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. மேலும் இந்தியா தாண்டி உலகெங்கும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் ஒரு விஷயத்தில் விராட் கோலியை பின்பற்றுகிறார்கள்.

- Advertisement -

அது என்னவென்றால், உடல் தகுதிதான் அது. விராட் கோலி தன்னுடைய உடல் தகுதியை உச்சத்தில் வைத்து, அதற்காக கடுமையான உணவு கட்டுப்பாட்டு பழக்கவழக்கங்களை மேற்கொண்டு, தனது அணிக்குள்ளும் அதை கட்டாயம் ஆக்கி, இன்று தான் கேப்டனாக இல்லாத பொழுதும், அதையே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பின்பற்றும்படி செய்திருக்கிறார்.

தற்பொழுது ரோகித் சர்மா மற்றும் கில், விராட் கோலி ஆகிறது உடல் தகுதி எப்படியானது? இந்த உடல் தகுதி கலாச்சாரத்தை இந்திய அணிக்குள் எப்படி விராட் கோலி கொண்டு வந்தார்? என்பது குறித்து இந்திய அணியின் உடல் தகுதி பயிற்சியாளர் அங்கீத் காலியார் மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரோகித் ஒரு பிட்டான பிளேயர். அவர் கொஞ்சம் பல்க்கியாக தெரிவார். ஆனால் உடல் தகுதி தேர்வில் எப்பொழுதும் வெற்றி பெறுவார். அவரும் விராட் கோலி போல பிட்டாக இருக்கிறார். அவர் கொஞ்சம் பருமனாக தெரியக்கூடியவர்தான், ஆனால் களத்தில் அவருடைய சுறுசுறுப்பு எப்படியானது என்று நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

சுப்மன் கில் மிகவும் உடல் தகுதி கொண்ட வீரர். அவர் உடல் தகுதிக்கு மட்டுமல்லாமல் திறமையிலும் விராட் கோலியை பின்பற்றக் கூடியவர். அவர் எல்லா விதத்திலும் வருங்காலத்தில் நாட்டுக்கு சிறப்பாக செயல்படுவார்.

விராட் கோலி உடல் தகுதி என்பது ஒரு தடகள வீரருக்கு இருக்கும் உடல் தகுதி. அவர் இந்த விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருப்பவர். உடற்பயிற்சி மட்டும் இல்லாமல் உணவு பழக்க வழக்கத்திலும் அவர் மிகுந்த கட்டுப்பாட்டை கொண்டு இருப்பவர்.

இந்திய கிரிக்கெட்டில் உடல் தகுதி கலாச்சாரத்தை புகுத்தியவர் விராட் கோலிதான். ஒரு கேப்டனாக அவரே முன்நின்று உடல் தகுதியில் உதாரணமாக மற்றவர்களுக்கு இருந்தார். அவர் அனைவரும் உடல் தகுதியில் இருப்பதை எப்பொழுதும் உறுதி செய்து கொள்வார்.

இந்திய அணியில் விராட் கோலி உடல் தகுதி கலாச்சாரத்தையும் அந்த ஒழுக்கத்தையும் உருவாக்கினார். அந்தச் சூழ்நிலையை அணிக்குள் அவர் கொண்டு வந்தார். இன்று அனைவரும் உடல் தகுதியுடன் சரியாக இருப்பதற்கு காரணம் விராட் கோலிதான்!” என்று கூறியிருக்கிறார்!