“மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் மட்டுமில்லை.. நாங்களும் டிரேடிங் பண்ண பார்த்தோம்!” – சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் ஆச்சரிய தகவல்!

0
14353
Kaasi

தற்பொழுது 17வது ஐபிஎல் சீசனுக்கு மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதிதுபாயில் நடக்க இருக்கிறது. இதற்காக வெளியேற்றப்படும் வீரர்களை அறிவிக்க வேண்டிய கடைசி நாள் இரண்டு நாட்களுக்கு முன்பாக முடிந்தது.

இதன்படி 10 அணிகளும் தங்களுக்கு வேண்டாத வீரர்களை வெளியேற்றி இருக்கிறார்கள். இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓய்வு பெற்ற அம்பதி ராயுடன் சேர்த்து, மொத்தம் எட்டு வீரர்களை கழட்டி விட்டது.

- Advertisement -

மேலும் வீரர்களை இரு அணிகள் தங்களுக்குள் டிரேடிங் செய்து கொள்ள இன்னும் நாள் முடியவில்லை. இதற்கு ஏலத்திற்கு ஒரு வாரம் முன்பாக அதாவது டிசம்பர் 13 ஆம் தேதி வரையில் நாள் இருக்கிறது. எனவே இன்னும் சில டிரேடிங் நடக்கக் கூட வாய்ப்பு இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மற்றும் இதுவரையிலான ஐபிஎல் டிரேடிங் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் ட்ரேடிங்தான் மிகப்பெரிய நிகழ்வு.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான இரண்டு அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் இப்படி ஒன்றை செய்திருக்கும் பொழுது, எதிர் முகாமான சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் சி.ஐ.ஓ காசி விஸ்வநாதன் கூறும்பொழுது ” கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் ஒரே ஒரு டிரேடிங் மட்டுமே ராபின் உத்தப்பாவுக்காகச் செய்திருக்கிறோம். நாங்களும் அம்பதிராய்டுக்கு பதிலாக சில வீரர்களை டிரேடிங் செய்ய தேடினோம். ஆனால் எங்களால் அந்த வீரர்களை பெற முடியவில்லை.

அணியில் ஒரு முக்கியமான இடத்தை நிரப்ப வேண்டியது இருக்கிறது. அதை அனுபவம் வாய்ந்த வீரரைக் கொண்டு நிரப்ப முடியுமா என்று பார்ப்போம். ஒருவேளை அப்படி நிரப்ப முடியாவிட்டால், அந்த இடத்தை இளைஞர்களைக் கொண்டு நிரப்புவோம்.

ஹர்திக்கை பொறுத்தவரை அவர் மும்பை இந்தியன்ஸ்க்கு சென்றார் என்பதை நாங்கள் இறுதியாகத்தான் கண்டுபிடித்தோம். சில சுவாரசியமான வீரர்கள் சில அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட இருக்கிறார்கள்.

மேலும் ஆஸ்திரேலியா வீரர்களான ஹெட், ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றவர்கள்ஏலத்திற்கு வருகிறார்கள். எனவே இது ஒரு சுவாரசியமான ஏலமாக இருக்கும் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -