கோலி இல்ல.. இவருக்கு தான் பிளேயர் ஆப் தி மேட்ச் கொடுத்திருக்கணும்.. கம்பீர் விவாதம் பாகிஸ்தான் போட்டிக்கு பின்.!

0
2171

ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்று முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் விளையாடியது. இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ரிசர்வ் நாளான திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று சாதனையுடன் தனது இரண்டாவது சுற்று கணக்கை துவங்கி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கில் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் இணைந்து முதலாவது விக்கெட் இருக்கு 121 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சதம் எடுத்தனர். மேலும் மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 233 ரன்கள் சேர்த்து ஆசிய கோப்பையிலேயே அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையையும் படைத்தனர். இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 94 பந்துகளில் ஒன்பது பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களுடன் 122 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 106 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்து நாட் அவுட் ஆக பெவிலியன் திரும்பினார்.

நேற்றைய போட்டியில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்றைய போட்டியில் அவர் எடுத்தது ஒரு நாள் போட்டியில் அவரது 47வது சதமாகும் . தனது சிறப்பான ஆட்டத்திற்காக விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் கிரிக்கெட் வர்ணணையாளருமான கௌதம் கம்பீர் ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என தனது கருத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பதிவு செய்து இருக்கிறார். விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் குல்தீப் யாதவ் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது மிகச் சிறப்பான பங்களிப்பு. அவருக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் கம்பீர்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” என்னை பொறுத்தவரை குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் . நேற்றைய போட்டியில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தனர். ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை கொடுத்து அரை சதம் எடுத்து இருக்கின்றனர் . இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையில் எட்டு ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது சிறந்த பந்துவீச்சாளராக அவருடைய தரத்தை காட்டுகிறது” என்று தெரிவித்தார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” குல்தீப் இந்த ஐந்து விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக எடுத்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கோ கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் சுழற் பந்துவீச்சிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இது நிச்சயமாக ஸ்பெஷலான ஒன்று. அவருக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் . ஆட்டநாயகன் விருந்திற்கு அவரைத் தாண்டி வேறு எந்த வீரரையும் என்னால் யோசிக்க முடியவில்லை” என தெரிவித்திருக்கிறார் கம்பீர்.