இந்திய அணி இல்லை.. 2024 டி20 உலக கோப்பை இவங்களுக்கு தான்.. நாசர் ஹுசைன் கணிப்பு

0
2217

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் ஆடப் போகும் அணிகள் குறித்தும், தொடர் நாயகன் விருதை வெல்லப்போகும் வீரர் குறித்தும் தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

டி20 உலக கோப்பைத் தொடர் வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக உலகக் கோப்பையில் பங்குபெறும் அனைத்து அணிகளும் மிகத் தீவிர பயிற்சியில் ஈடுபட இருக்கின்றன. இந்திய அணிக்கு மார்ச் மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரானது உலக கோப்பைக்கு முன்பு பயிற்சி பெற மிகவும் உதவிகரமாக இருக்கும்.

- Advertisement -

உலக கோப்பையை வெல்ல இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் போட்டி போடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதில் அனைத்து அணிகளுமே மிகவும் வலுவாக உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு படி மேலே சென்று தற்போது வலுவான அணியைக் கொண்டுள்ளது என்று கூறலாம். வலுவான பேட்டிங் மற்றும் திறமையான வேகப்பந்து வீச்சு என அணியில் சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

இதே போல இங்கிலாந்து அணியும் தற்போது மிகவும் வலுவாக உள்ளது. கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் கடைசியாக நடந்த டி20 உலக கோப்பையை வென்று அசத்தியது. எனவே இந்த முறையும் உலகக்கோப்பைக்காக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சமீபத்தில் நடந்த பேட்டியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் கூறுகையில்
“உலக கோப்பையை வெல்ல தற்போது அனைத்து அணிகளும் வலுவாக உள்ளன. அதில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகள் என்றால் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணியை நான் குறிப்பிடுவேன். இங்கிலாந்து அணியின் சமீபத்திய உலகக்கோப்பை செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இருப்பினும் அந்தக் குறையை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் சரி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

- Advertisement -

நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்டிலர் தலைமையில் மீண்டும் கோப்பையை வெல்ல முயற்சிக்கும். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதி வரை வந்து அசத்தியது. டி20 தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த அணியின் முக்கிய வீரர்களான அன்ரிச் நார்ட்ஜே மற்றும் சிசண்டா மகாலா ஆகியோர் திரும்புவதன் மூலம் அந்த அணி வலுவடையும்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உள்நாட்டு லீக் போட்டிகள் திறமையான சிறந்த வீரர்களை வெளிவர செய்கிறது. எனவே தென்னாபிரிக்க அணி வலுவான பேட்டிங் வரிசையுடன் சிறந்த பந்துவீச்சையும் கொண்டு உலக கோப்பையில் கடினமான அணியாக இருக்கும். பாகிஸ்தான் அணியும் உலக கோப்பையில் முக்கிய அணியாக இருக்க வாய்ப்புள்ளது.

டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வெல்ல சூரியகுமார் யாதவிற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அவரது பேட்டிங் திறமையை தற்போது உலகமே வியந்து கொண்டிருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையில் அவர் சில தவறுகளை செய்தாலும் டி20 தொடரில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்” என்று கூறி இருக்கிறார்.