“தோனி பாய் ஸ்ட்ரைக்கில் எல்லோராலும் இதைச் செய்ய முடியாது” – சந்திப் ஷர்மா குறித்து சஹால் பேட்டி!

0
675

ஐபிஎல் 16வது சீசன்  தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில்  தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் இருக்கும் சென்னை அணியுடன் மோதியது.

இந்தப் போட்டி ஒரு பரபரப்பான போட்டியாக முடிவடைந்தது. ஆட்டத்தின் இறுதிப் பந்து வரை வெற்றி தோல்வி யார் பக்கம் என கணிக்க முடியாத அளவிற்கு  மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இறுதியில் சந்திப்  சர்மாவின் சிறப்பான பந்துவீச்சினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 175 ரன்கள்  எட்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.தேவதத் படிக்கல் 38 ரன்கள் எடுத்திருந்தார்.

176 ரன்களை வெற்றி இலக்காக துரத்தி ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே அணியின் கான்வே சிறப்பாக ஆடி  38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அணியின் கேப்டன் டோனி 17 பந்துகளில்  மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியின் உதவியுடன் 32 எண்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 25 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் யுஜேந்திர சஹால் 27 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

இந்தப் போட்டியின் மூலம் நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் பத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் சஹால். இதன் மூலம் நேற்று அவருக்கு பர்பிள் கேப் கொடுக்கப்பட்டது. நேற்றைய போட்டியின் போது பனிப்பொழிவு இருந்தாலும் மிகவும் அற்புதமாக பந்துவீசி அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் பெரும்பாலான கட்டங்களில் ராஜஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் தான் கண்களை கட்டுப்படுத்திய விக்கெட்களை வீழ்த்த உதவினர் . இந்நிலையில் போட்டி முடிவுற்ற பின்னர் சஹால் சந்தீப் சர்மாவிடமிருந்து பர்பிள் கேப் பெற்றுக் கொண்டார் .

- Advertisement -

அப்போது பேசிய அவர் ” ஆடுகளத்தில் கிரிப் நன்றாக இருந்தது . பேட்ஸ்மேன் களுக்கு வேகத்தை கொடுக்காமல் முடிந்த அளவு மெதுவாக பத்து விசையை விரும்பினேன் . அதற்கு ஏற்ற பலனும் கிடைத்திருக்கிறது . நான் அஸ்வினுடன் இரண்டாவதா ஆண்டு தொடர்ச்சியாக விளையாடுகிறேன் . அவருடன் இணைந்து பந்து வீசுவது ஒரு அற்புதமான அனுபவம் . இந்த வருடம் ஜாம்பாவும் எங்களுடன் இணைந்து இருக்கிறார் . வலை பயிற்சியின்போது எங்களுடைய திட்டங்கள் மற்றும் எந்த அளவில் எவ்வளவு வேகத்தில் வந்து வீச வேண்டும் என்பதை ஆலோசிப்போம் எனக் கூறினார் . மேலும் தொடர்ந்து பேசிய அவர் தோனி பாய் இருக்கும் வரை ஆட்டம் எப்படி செல்லும் என்று யாருக்கும் தெரியாது . சந்திப் ஷர்மா மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்கள் அணிக்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார் . தோனி பாய் எதிர் முனையில் இருந்தாலும் தன்னுடைய தலைமையின் மீது நம்பிக்கை வைத்து அவர் வீசிய யார்கர் மிகவும் அபாரமானவை இது போன்ற போட்டிகள் தான் இனி நடக்க இருக்கும் போட்டிகளுக்கான ஆர்வத்தை தூண்டும்” எனக் கூறி முடித்தார் சஹால் .