யுவராஜ் கோலி கைப் இல்லை.. சிறந்த பீல்டர் இந்த 60வயது முன்னாள் இந்திய வீரர்தான் – வெங்கடேஷ் பிரசாத் தேர்வு!

0
829
Yuvraj

இந்திய கிரிக்கெட் மிக எழுச்சி அடைந்த காலக்கட்டமாக தற்போதைய காலகட்டமே இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் சராசரியான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தனிப்பட்ட வீரர்களை தாண்டி அணியாக செயலாற்றும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

ஆரம்ப காலங்களில் ஒன்று இரண்டு வீரர்களை நம்பியும், சரியான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமலும், மேலும் உடல் தகுதியில் பெரிய அளவில் கவனம் கொடுக்காமல் பீல்ங்கில் பின் தங்கியும் இந்திய கிரிக்கெட் இருந்து வந்தது.

- Advertisement -

90கள் மற்றும் 2000ல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களாக இருந்தவர்களுக்கு, தற்பொழுது மூன்று துறைகளிலும் இந்திய கிரிக்கெட் எட்டியிருக்கும் வளர்ச்சி குறித்து மிக நன்றாகவே தெரியும்.

இந்தியாவிற்கு சிறந்த பேட்ஸ்மேன்கள் கிடைத்தாலும் கூட, தரமான வேகப்பந்துவீச்சாளர்களும் தரமான பீல்டர்களும் தொடர்ச்சியாக கிடைக்காமல் இருந்து வந்தது பெரிய ஏமாற்றமாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் சிறந்த பீல்டர்களாக ஒரே சமயத்தில் யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் என இருவர் வெளியே வந்தார்கள். இவர்களுக்கு அடுத்து சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் கிடைத்தார்கள். இதற்கு அடுத்து சிறந்த பீல்டராக விராட் கோலி உருவெடுத்தார்.

- Advertisement -

மேலும் விராட் கோலி உடல் தகுதிக்கு இந்திய கிரிக்கெட்டில் அதிக முக்கியத்துவத்தை தர ஆரம்பித்த பிறகு, இந்தியாவின் ஃபீல்டிங் தரம் உலக அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் இந்திய கிரிக்கெட்டின் மூன்று மிகச் சிறந்த பீல்டர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது, யுவராஜ் சிங், முகமது கைப், விராட் கோலி என எல்லோரையும் புறக்கணித்து, வித்தியாசமான தனது மூன்று தேர்வுகளை முன்னிறுத்தி இருக்கிறார்.

அவர் தன்னுடைய முதல் தேர்வில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதற்கடுத்து உலக கோப்பையை வென்ற சுரேஷ் ரெய்னா மற்றும் தற்போது விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா என மூன்று பேரையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவருடைய இந்த தேர்வு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.