ராஜஸ்தான் தோல்வி.. இந்திய அணிக்கு நடந்த நல்ல விஷயம்.. டி20 உலக கோப்பையில் ஜாக்பாட் அடித்தது

0
1504
ICT

இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசன் தற்பொழுது இறுதிப் போட்டியை எட்டி இருக்கிறது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இது டி20 உலகக்கோப்பையில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான சாதகத்தை உருவாக்கி இருக்கிறது.

பிளே ஆப் சுற்றில் முதலில் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை எளிதாக வென்று கொல்கத்தா அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

- Advertisement -

இதற்கு அடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியை வென்று இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றில் ஹைதராபாத் அணி ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்குள் வந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா என இரண்டு அணிகளிலும், டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும்யாரும் இல்லை.

இதன் காரணமாக டி20 சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சாகல் ஆகிய மூன்று வீரர்களுக்கும் கூடுதலாக இரண்டு மூன்று நாட்கள் ஓய்வு கிடைக்கும். இது டி20 உலகக் கோப்பைக்கு இந்த வீரர்களின் உடல் நல்ல முறையில் தயார் ஆவதற்கு சிறந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கோச் கேப்டன் என்கிட்ட இதைத்தான் சொன்னாங்க.. பேட்டிங் பண்றப்பயே தெரிஞ்சிருச்சு – ஷாபாஷ் அகமத் பேட்டி

மேலும் இறுதிப் போட்டியில் விளையாடும் கொல்கத்தா அணியில் டி20 உலக கோப்பை ரிசர்வ் வீரராக இடம்பெற்று இருக்கும் ரிங்கு சிங் மட்டுமே இருக்கிறார். அவர் ரிசர்வ் வீரர் என்கின்ற காரணத்தினால் ஓய்வு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.