“இப்படி ஒரு அபத்தத்தை யாரும் செய்ய மாட்டாங்க.. பாபர் அசாம் பலவீனம்!” – விடாமல் தாக்கும் பாகிஸ்தான் டேனிஷ் கனேரியா!

0
908
Babar

நேற்று பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியின் மூலமாக ஏறக்குறைய பாகிஸ்தான் அணி முதல் சுற்று உடன் வெளியேறுவது முடிவாகி இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பு என்பது பாகிஸ்தானுக்கு மிகக் கடினமான ஒன்றாக மாறியிருக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் உசாமா ஓரளவுக்கு சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்க, அவரிடம் செல்லாமல் முக்கியமான ஓவரை முகமது நவாஸ்க்கு பாபர் அசாம் கொடுத்தார்.

அவர் 48வது ஓவரின் இரண்டாவது பந்தை கால்களுக்கு வெளியே வீசி, எளிதான பவுண்டரி ஒன்றை விட்டுக் கொடுத்து பாகிஸ்தான் அணி தோல்விக்கு முக்கிய காரணமாக மாறினார்.

இது மட்டும் இல்லாமல் கேப்டன் பாபர் அசாம் அதிரடியான கேப்டன்சி முறையை பின்பற்றாமல் மிகவும் தற்காப்பான முறையில் சென்று கொண்டிருந்தார். டிக்கெட் எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கின்ற ஆட்டத்தில் அவரது அணுகுமுறை மிகவும் தவறான ஒன்றாக இருந்தது.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ்னேரியா கூறும்பொழுது ” இது முகமது நவாஸின் அபத்தமான ஒரு பந்துவீச்சு. இப்திகார் அகமது கூட இதைவிட நன்றாகச் செய்திருப்பார். தற்போது துரதிஷ்டவசமாக நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எல்லாம் முடிந்துவிட்டது.

பாகிஸ்தான் 21 எக்ஸ்ட்ராக்களை விட்டுக் கொடுத்தது. எக்ஸ்ட்ராக்களை கட்டுப்படுத்தி இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக அமைந்திருக்கும். கடைசிக் கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் யார்க்கர்கள் வீச முயற்சி செய்யவில்லை, அந்த இடத்தில் வரும் பேட்ஸ்மேன்களை தாக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் கேப்டனாக பாபர் அசாமின் செயல்பாடு பலவீனமாக இருந்தது. குறைந்தபட்சம் கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்களுக்காவது ஸ்லிப் வைத்து இருக்கலாம்.

பாகிஸ்தான் ஒட்டு மொத்த அணியாக இந்த போட்டியில் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டது. வெற்றி பெற வேண்டும் என்கிற விருப்பமும் ஆக்ரோஷமும் அவர்களிடம் இருந்தது. அவர்கள் விளையாடாமல் விட்ட 20 பந்துகளை விளையாடி இருந்திருக்க வேண்டும். அவர்கள் 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருப்பார்கள்!” என்று கூறி இருக்கிறார்!