“இந்தியாவுக்கு எதிரா டாஸ் எப்படி விழுந்தாலும்.. எல்லா திட்டமும் தயாரா இருக்கு!” – பெர்குசன் அதிரடி பேட்டி!

0
9882
Ferguson

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், தொடரை நடத்தும் இந்திய அணி விளையாடும் நாக் அவுட் போட்டி வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி மும்பை மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க இருக்கிறது.

கடந்த உலகக் கோப்பையில் இதே போல் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால், இந்தப் போட்டிக்கு கூடுதலான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே இருக்கிறது.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை விட தற்போதைய இந்திய அணி வலிமையானதாக இருக்கிறது. மேலும் இந்திய அணி தனது சொந்த நாட்டில் சொந்த ரசிகர்களின் முன்னிலையில் விளையாட இருக்கிறது. இதுவெல்லாம் தற்பொழுது இந்திய அணிக்கு பலமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

அதே சமயத்தில் திட்டங்களை மட்டுமே நம்பி வந்து பெரிய தொடர்களில் பெரிய வெற்றிகளை பெறக்கூடிய அணியாக நியூசிலாந்து தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. எனவே பெரிய தொடர்களில் நியூசிலாந்து யாரை வேண்டுமானாலும் வீழ்த்தும். இதுதான் அவர்களுடைய கிரிக்கெட் வரலாறு. எனவே இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்க அளவில் இருக்கிறது.

இந்த போட்டி குறித்து அந்த அணியின் அதிவேக பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் கூறும்பொழுது ” நாங்கள் இப்போது நன்றாக தெரிகிறோம். எங்கள் பக்கத்தில் மேட் ஹென்றி இல்லாதது பெரிய ஓட்டையாக அமைந்திருக்கிறது. ஆனாலும் கூட அனுபவம் வாய்ந்த டிம் சவுதி உள்ளே வருகின்ற காரணத்தினால் நாங்கள் இப்பொழுதும் ஒரு சரியான அணியாகவே இருக்கிறோம். அவர் நியூசிலாந்து அணியை டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவங்களில் கேப்டனாக வழி நடத்திய அனுபவம் கொண்டவர்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் நிறைய இந்திய மைதானங்கள் நிறைய ஸ்கோர் அடித்த மைதானங்களாக இருக்கின்றன. உலகின் இந்தப் பகுதியில் ஒருநாள் கிரிக்கெட்டின் இயல்பு இதுதான்.

எனவே ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற ரன்களை எடுத்து ஆக வேண்டும். ஏனென்றால் குறைவாக எடுக்கும் 10 ரன்கள் கூட பிற்பகுதியில் மிகப்பெரிய பின்னடைவை கொண்டு வரும்.

நாம் நம்முடைய விளையாட்டைதான் அந்த நாளில் விளையாட வேண்டும். முதலில் பேட்டிங் அல்லது பந்துவீச்சு என்று எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. திட்டத்தோடு ஒட்டிக் கொள்வது முக்கியம்.

அதே சமயத்தில் முதலில் பேட்டிங் செய்து இரண்டாவது பந்து வீசும் பொழுது, மின்விளக்குகளின் கீழ் பந்து நன்றாக நகரச் செய்யும். அது நம்மை ஆட்டத்திற்குள் கொண்டு வரும். எனவே நான் இந்த வகையில் முதலில் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!