“விராட் கோலிய எப்ப பாராட்டினாலும்.. இந்த விஷயத்தை ஏத்துக்கவே ஏத்துக்கவே மாட்டார்!” – ஏபி.டிவிலியர்ஸ் சிறப்பு பேட்டி!

0
2596
Virat

நடப்பு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தால் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி குறித்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

அதே சமயத்தில் இந்த வருடம் முழுக்க ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தினால், அவரே தொடரின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரராக இருப்பார் என்று பல முன்னாள் வீரர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.

- Advertisement -

முன்னாள் வீரர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக டெங்கு காய்ச்சல் பாதிப்பால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத கில் பேட்டிங் இதுவரை பெரிய அளவில் அமையவில்லை.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் விராட் கோலியின் பேட்டிங் அமைந்திருக்கிறது. அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக இரண்டு சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் உடன் 543 ரன்களை, 8 போட்டிகளில் எடுத்து, அதிக ரன் அடித்தவர் பட்டியலில் இந்த உலகக் கோப்பையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிகபட்ச சதங்கள் அடித்து இருந்த 49வது சதத்தை, 175 இன்னிங்ஸ்கள் குறைவாக விராட் கோலி அடித்து சாதனையை சமன் செய்திருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்ரிக்காவின் முன்னாள் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் கூறும் பொழுது ” விராட் கோலியும் நானும் நட்பு ரீதியில் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். நானும் அவரும் சகோதரர்கள் மாதிரி. விராட் கோலி மீது நான் எப்பொழுதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

விராட் கோலி புதிய தலைமுறையின் வீரர். இதன் காரணமாக சச்சின் உடன் அவரை ஒப்பிட முடியாது. சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் எடுத்ததே மிகப்பெரிய விஷயம். ஆனால் அதை 175 எண்ணிக்கை குறைவாக விராட் கோலி எடுத்திருப்பதுதான் சிறப்பு மிக்க ஒன்றாக மாறுகிறது. இந்தக்கால கிரிக்கெட்டில் 250 ரன்கள் என்பது நகைப்புக்குரிய ஒன்று. 400 ரன்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விராட் கோலி மிகவும் நல்லவர். அவர் எப்போதும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பார். அவர் யாருடைய சாதனையை முறியடித்தாலும், அவருடைய புள்ளிவிபரங்கள் சிறப்பாக இருந்தாலும் விராட் கோலி எப்பொழுதும் ‘இல்லை இல்லை நான் அவரை விட எந்த வகையிலும் பெரியவன் இல்லை’ என்று கூறுவார்.

இந்த வகையில் அவர் சச்சினை விட பெரியவராகவோ அல்லது சிறியவராகவோ எப்படியோ இருக்கலாம். ஆனால் அவர் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்கிறார் என்பதுதான் முக்கிய விஷயம்!” என்று கூறியிருக்கிறார்!