“இங்கிலாந்து எவ்வளவு டார்கெட் கொடுத்தாலும் திருப்பி அடிப்போம்.. எங்க பிளானே வேற” – இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

0
217
Paras

சில ஆண்டுகளாக இந்திய ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சாதகமாக அமைக்கப்படுகிறது என்கின்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. மேலும் வெளியில் இருந்து வரக்கூடிய அணிகள் இந்திய சுழற் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மூன்று நாட்களுக்குள் ஆட்டம் முடிந்தது.

எனவே இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இப்படியே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கணிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிகள் தற்போது மோதிக் கொண்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளான இன்று முடிவுக்கு வர வேண்டியது. ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன் போப் 148 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

தற்பொழுது 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கும் இங்கிலாந்து கைவசம் இன்னும் நான்கு விக்கெட்டுகள் இருக்கிறது. இதைக் கொண்டு அவர்கள் எவ்வளவு இலக்கு நிர்ணயித்தாலும் அது பற்றி கவலை இல்லை என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் இவ்வளவு என்று குறிப்பிட்ட இலக்கு எதையும் பார்க்கவில்லை. நாளை காலை நாங்கள் அவர்களை சீக்கிரத்தில் ஆல் அவுட் செய்ய முயற்சிப்போம். சரியான பகுதிகளில் பந்து வீசி பவுன்ஸ் மற்றும் டர்ன் இரண்டையும் பயன்படுத்திக் கொள்ள பார்ப்போம்.

- Advertisement -

இதுவரை ஆட்டம் நகர்ந்ததிலிருந்து எடுத்துக் கொண்டால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் சிறப்பாக மாறி இருக்கிறது. பொதுவாக நான்காவது நாளில் கொஞ்சம் டர்ன் அதிகமாக இருக்கும்.ஆனால் பொதுவாக இந்திய துணை கண்டத்தில் இருக்கும் அளவுக்கு பெரிய டர்ன் இருக்காது. இது எங்களுக்கு பேட்டிங் செய்வதற்கு சவால் ஆனது கிடையாது.

இங்கிலாந்து சில ஆண்டுகளாக அதிரடியாக விளையாடும் கிரிக்கெட் அணுகுமுறை எங்களுக்கு தெரியும். அவர்கள் எங்கும் அப்படியே விளையாடுவார்கள் என்று நினைத்தோம். அவர்கள் அதிரடியாகத்தான் விளையாடி இருக்கிறார்கள். இதற்கான பெருமை போப்புக்கு சேரும்.

இதையும் படிங்க : ஹைதராபாத் மைதானத்தின் 4வது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் என்ன?.. இந்தியா ஜெயிக்க முடியுமா?.. முழு விபரம்

பேட்ஸ்மேன்கள் ஷாட் அடிப்பதற்கு வித்தியாசமான இடங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது அது சவாலான ஒன்றாக இருக்கும். போப் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் ஸ்கொயர் லெக் பகுதியை தேர்ந்தெடுத்து அடித்தார். அவர்களுக்கு உண்மையில் அது தேவைப்படும் பொழுது தாக்குதலை தொடுத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.