ஹைதராபாத் மைதானத்தின் 4வது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் என்ன?.. இந்தியா ஜெயிக்க முடியுமா?.. முழு விபரம்

0
1751
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் திடீரென இங்கிலாந்து போட்டிக்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கிலாந்து டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டும் எடுக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங்கில் செயல்பட்டு 436 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால், இங்கிலாந்து அணி இந்தியா பெற்ற முன்னிலையை தாண்டுமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில் மூன்றாவது நாளான இன்றே போட்டி முடிந்து விடும் இந்தியா வெற்றி பெற்று விடும் என பலரும் கருதி இருந்தார்கள். கிரிக்கெட் வர்ணனை செய்து வரும் முன்னாள் வீரர்களே இந்த எண்ணத்தில்தான் இருந்தார்கள்.

ஆனால் இங்கிலாந்து அணியின் போப் வித்தியாசமான முறையில் அதிரடியாக பேட்டிங் செய்து 148 ரன்கள் குவித்து களத்திலும் நின்று போட்டியை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறார். தற்பொழுது ஆறு விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்திருக்கும் இங்கிலாந்து, 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

- Advertisement -

நாளை மேற்கொண்டு இங்கிலாந்து அணியை எவ்வளவு ஸ்கோரில் நிறுத்த வேண்டும்? இந்திய அணிக்கு நான்காவது இன்னிங்ஸில் எவ்வளவு ரன்கள் சரியானதாக இருக்கும்? என்பது குறித்து புள்ளி விவரங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்க்கலாம்.

இதுவரை ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற பத்து டெஸ்ட் போட்டிகளில் ஒன்பது போட்டிகளை வென்று ஒரு போட்டி டிரா ஆகி இருக்கிறது. இங்கு இந்திய அணி தோல்வி அடைந்தது கிடையாது.

மேலும் இங்கு முதல் இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 400, இரண்டாவது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 375, மூன்றாவது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 200, நான்காவது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 150 என்பதாக இருக்கிறது.

இதையும் படிங்க : “இந்தியாவில் ரன் எடுப்பதில் அவர் மாஸ்டர்.. வெற்றி எங்களுக்குதான்” – ஜோ ரூட் அதிரடியான கருத்து

தற்பொழுது இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அவர்களை மேற்கொண்டு 150 ரன்கள் முன்னிலைக்குள் மடக்க வேண்டும் என்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

ஆனால் இந்த போட்டியில் இங்கிலாந்து விதிவிலக்காக மூன்றாவது இன்னிங்சில் 200 ரன்கள் என்பதைத் தாண்டி 316 ரன்கள் குவித்திருக்கிறது. எனவே இந்திய அணியும் நான்காவது இன்னிங்ஸில் சராசரியாக 150 ரன்கள் என்பதை தாண்டி அடிக்க முடியும் என்று நம்பலாம். 200 ரன்கள் எனக்காக இருக்கும் பட்சத்தில் இந்திய அணியால் அதை எட்ட முடியும் என்பதாகத்தான் பேட்டிங் வலிமை இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!