“கோலி கிடையாது.. இவர தூக்குனாதான் ஜெயிப்போம்!” – பாக் லெஜன்ட்ஸ் அதிரடி அட்வைஸ்!

0
1354
Virat

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த நாள் வந்துவிட்டது. நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன!

இந்தப் போட்டிக்கு முன்பு வழக்கமான பத்திரிக்கையாளர் சந்திப்பை இரு அணிகளின் கேப்டன்களும் முடித்துவிட்டனர். உலகக் கோப்பையில் தொடர்ந்து வரும் துரதிஷ்டத்தை முடித்து வைப்போம் என பாபர் அசாம் பாகிஸ்தான் தரப்பில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

எந்த மாதிரியான ஆடுகளத்திலும் விளையாட முடிவதுதான் எங்களுடைய தரம் என்றும், புள்ளி விபரங்களை பற்றி எப்போதும் கவலைப்பட்டது கிடையாது என்றும் ரோகித் சர்மா இந்திய தரப்பில் கூறியிருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மீடியாக்கள் எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்ட முடியுமோ அந்த அளவிற்கு கூட்டி வருகின்றன.

மேலும் மீடியாவோடு சேர்ந்து இரு அணிகளின் முன்னாள் வீரர்களும் தங்களின் பங்குக்கு இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பை உற்சாகமாக ரசிகர்களின் மத்தியில் ஏற்றி வருகின்றனர்.

- Advertisement -

இந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை கூறிய வாசிம் அக்ரம் பேசும் பொழுது “ரோகித் சர்மா மிகவும் அழகாக விளையாட்டில் இருந்தார். அவர் எந்த ஆபத்தும் இல்லாமல் எளிதாக ஷாட்கள் விளையாடினார். மற்ற யாரையும் விட அவருக்கு பேட்டிங் டைமிங் அதிகம் இருந்தது.

விராட் கோலி தன் பங்கிற்கு ஒரு 50 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல நாக். ஆனால் ரோகித் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருந்தார். அது ஒரு பீஸ்ட் மோட்.

அவரது சாதனையைப் பாருங்கள். சச்சின் டெண்டுல்கர் 44 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இன்னிங்ஸ்களில் ஆறு சதங்கள் அடித்து இருக்க, இவரோ அதை வெறும் 19 இன்னிங்ஸ்களில் அடித்திருக்கிறார். இவ்வளவு விரைவாக பெறுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!

வாசிம் அக்ரம் உடன் இணைந்து பேசிய மொயின் கான் கூறும் பொழுது “ரோகித்தை சீக்கிரமே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதை ஷாகின் இல்லை யாராவது நல்ல பவுன்சர், யார்கர் வீசி செய்ய வேண்டும். அப்படி ஏதும் செய்யாவிட்டால் அவரை வெளியேற்றுவது என்பது மிகக் கடினமானது!” என்று கூறி இருக்கிறார்கள்!