“கோலி பாபர் இல்லை.. இவர்தான் புதிய சூப்பர் ஸ்டார்.. ஷாகின் அவர்கிட்ட மோதாதே!” – சல்மான் பட் அதிரடி அறிக்கை!

0
3100
Butt

சமீப காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கிறது என்றாலே, அந்தப் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மட்டுமே முக்கிய பேச்சாக இருப்பதில்லை. இவர்களுக்கு சமமாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பாகிஸ்தானின் ஷாஹின் ஷா அப்ரிடி இருக்கிறார்!

அவர் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை சிறப்பான கோணத்தில் வீசுவது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. ஆனால் அவர் அதே வேகத்தில் பந்தை ஸ்விங் செய்கிறார். இது உலகின் எந்த பெரிய பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தக் கூடியது. இதற்கு இந்திய பேட்ஸ்மேன்களும் விதிவிலக்காக இல்லை.

- Advertisement -

இதன் காரணமாக சில ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் பொழுது ஷாகின் ஷா அப்ரிடி குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல ஆசியக் கோப்பை முதல் போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை அதிரடியாக வெளியேற்றினார். இதனால் இவர் குறித்த பேச்சு இன்னும் சூடு பிடித்தது.

இந்த நிலையில் நேற்று ஆசியக் கோப்பையில் இரண்டாவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட பொழுது, இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் வந்து வீட்டுக்கு சாதகமான நிலைமையில் மிகச் சிறப்பாக தாக்குதல் ஆட்டம் ஆடி ஷாகின் ஷா அப்ரிடியை நொறுக்கி தள்ளினார். அவர் மூன்று ஓவர்களுக்கு 31 ரன்கள் தந்து முதல் ஸ்பெல்லை முடித்தார்.

இந்த நிலையில் இந்த போட்டி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறும் பொழுது ” கில் ஆரம்பத்திலேயே அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். அவர் ஸ்விங் பந்தில் எந்த ஷாட்டை விளையாடவில்லை என்று சொல்லுங்கள். அவர் எல்லா ஷாட்டையும் விளையாடினார். ஆனாலும் ஷாகின் பொறுமை இழந்ததாக நான் உணர்கிறேன்.

- Advertisement -

ஒரு பேட்டர் ஒரு போட்டியில் அடி வாங்கினால், அவர் மீண்டும் திரும்ப வருவார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் ஒரு தரமான பேட்ஸ்மேன் இரண்டு நல்ல ஷாட்களை விளையாடினால், நீங்கள் நன்றாக பந்து வீசவில்லை என்று நினைக்கக் கூடாது. ஷாகின் இப்படி நினைத்து நிறைய முயற்சி செய்தார்.

அவர் சில ஷார்ட் பந்துகள் வீசினார். பிறகு ஃபுல் லென்த்தில் வீசினார். மேலும் ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து வந்து வீசினார். அந்த முதல் மூன்று ஓவர்களில் அவர் ஐந்து ஆறு விஷயங்களை செய்தார். ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க முயற்சி செய்ததால் அவர் அடிபட்டார்.

கில் நேர்த்தியான ஷாட்களை விளையாடினார். அவர் ஸ்லாக் செய்யவோ அபாயகரமான ஷாட்களை விளையாடவோ முயற்சி செய்யவில்லை. பாகிஸ்தானின் பந்துவீச்சை சுற்றி இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இம்மாதிரியான சூழலில் இந்த மாதிரி விளையாடுவது அவர் எப்படிப்பட்ட மனவலிமை கொண்டவர் என்று காட்டுகிறது. இது ஒரு சிறந்த செய்தி. சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய சூப்பர் ஸ்டார் வந்து விட்டார்!” என்று கூறியிருக்கிறார்!