“கேஎல்.ராகுல் இல்லை.. ஜடேஜாவாவது விளையாடுவாரா?” – குல்தீப் யாதவ் வெளியிட்ட தகவல்

0
59
Kuldeep

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட் மைதானத்தில் துவங்குகிறது.

இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்வதற்கும் இரண்டாவது பேட்டிங் செய்வதற்கும் பெரிய வேறுபாடுகள் இருக்காது.

- Advertisement -

இந்த முறை ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று ஆடுகளமே இப்படியான புள்ளி விபரங்கள் உடனே அமைந்திருக்கின்றன. இதனால் போட்டிகள் நான்காவது நாளுக்கு செல்கின்றன. மூன்றாவது போட்டி ஐந்தாவது நாளுக்கும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாக இருந்த கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் உடல் தகுதி எட்டாததால் அணியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார். தேவ்தத் படிக்கல் அவருடைய இடத்திற்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இவரைப் போலவே காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்ப மூன்றாவது டெஸ்டுக்கு வந்திருக்கும் ரவீந்திர ஜடேஜாவின் உடல் தகுதி கடைசி நேரத்தில்தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. எனவே அவர் விளையாடுவாரா? என்று இதுவரையில் தெரியவில்லை.

- Advertisement -

தற்போது இது குறித்து பேசி இருக்கும் குல்தீப் யாதவ் கூறும் பொழுது ” ரவீந்திர ஜடேஜா தன்னுடைய வழக்கமான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். நேற்றும் ஒரு பயிற்சி அமர்வை செய்தார். அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்றே நினைக்கிறேன்.

போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்ற காரணத்தினால் நான் விளையாடுவேனா என்று கூட தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் அது குறித்து நான் பெரிதாக யோசிப்பது கிடையாது.

இதையும் படிங்க : AUSvsWI.. வெறும் 29 பந்து.. ரசல் காட்டடி.. அடங்கிய ஆஸ்திரேலியா.. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இந்திய அணியில் கடந்த முறைகளில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நான் அந்த அணியில் இணைந்து விளையாடவில்லை. இதனால் அணியின் திட்டமும் ஆடுகளமும் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. நல்ல கிரிக்கெட்டுக்கு நல்ல ஆடுகளம் அமைய வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.