வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இன்று மூன்றாவது போட்டியில் பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் இந்த முறை முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்தது. இந்த முடிவு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு நல்லதாகவே அமைந்தது.
ஆனால் முதலில் துவக்க ஆட்டக்காரர்கள் ஜாஸ்டன் சார்லஸ் 4, கையில் மேயர்ஸ் 11, நிக்கோலஸ் பூரன் 1 என முதல் மூன்று முக்கிய விக்கெட்டுகளும் வரிசையாக வெளியேறியது.
இந்தப் போட்டியில் ஷாய் ஹோப் இடத்தில் வாய்ப்பு பெற்ற ரோஸ்டன் சேஸ் 20 பந்தில் 37 ரன்கள், கேப்டன் ரோமன் பவல் 14 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த செர்பான் ரூதர்போர்டு மற்றும் அதிரடி சூரர் ஆண்ட்ரே ரசல் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியா பந்துவீச்சை வதம் செய்து விட்டார்கள்.
குறிப்பாக ஆன்ட்ரே ரசல் மீண்டும் பழைய ரசலாய் திரும்ப வந்தார். வெறும் 29 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 71 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக்ரேட் 244!
இவருடன் இணைந்து இறுதிவரை ஆட்டமெலக்காமல் விளையாடிய செர்பான் ரூதர்போர்டு 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சித்தர்கள் உடன் 67 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி மொத்தம் 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சேவியர் பார்ட்லெட் 4 ஓவர் 37 ரன்களுக்கு இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இந்த தொடரின் மூன்று போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸ் அணி சராசரியாக 200 ரன்களை தொட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு இந்த முறை கேப்டன் மிட்சல் மார்ஸ் துவக்க வீரராக வந்து 17(13), ஆரோன் ஹார்டி 16(16), ஜோஸ் இங்லீஷ் 1(3) என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று மிரட்டிய டேவிட் வார்னர் 49 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார். அபாயகரமான மேக்ஸ்வெல் 14 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதையும் படிங்க : “கேஎல்.ராகுல் ஏன் தவறான சிக்னல்களை கொடுக்கிறார்?” – பிசிசிஐ வட்டாரத்தில் சர்ச்சையான சம்பவம்
இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் கொஞ்சம் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உடன் 41* ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை எடுத்து வெஸ்ட் இண்டிஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் மற்றும் ரொமாரியோ செப்பர்டு தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.