10 பந்துக்கு 15 ரன்.. வாய்ப்பை தவறவிட்ட நியூசிலாந்து.. தப்பிய பாகிஸ்தான் அணி.. பாபரின் 8 பவுலர்கள் கான்செப்ட்

0
1157
Pakistan

தற்போது நியூசிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று கடைசி டி20 போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியை வென்று பாகிஸ்தான் தொடரை சமன் செய்திருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு சையும் அயூப் 1(5) ரன்களில் வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் 24 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். பகார் சாமான் 33 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஒரு முனையில் நின்று சிறப்பாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 44 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 69 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தார்கள். மேலும் இன்றைய போட்டியை வென்றால் நியூசிலாந்து தொடரை கைப்பற்றலாம், பாகிஸ்தான் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்கின்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் தொடரை வெல்லும் முனைப்புடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டிம் செய்பெர்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் இதற்கு அடுத்து அதிகபட்சமாக ஜோஸ் கிளார்க்சன் மட்டுமே இறுதிவரை போராடி 26 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். கடைசி 72 ரன்களுக்கு நியூசிலாந்து எட்டு விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது, கடைசி 10 பந்துகளில் 15 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இதே சூழ்நிலையில் கடைசி ஓவருக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. முகமது அமீர் வீசிய அந்த கடைசி ஓவரில், இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து, கடைசி இரண்டு விக்கெட்டுகளும் ரன் அவுட் ஆக, பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை நல்ல வாய்ப்பை, நியூசிலாந்து 169 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி இழந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல்-ல் 2வது அணியாக ராஜஸ்தான் சாதனை.. பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமானது.. லக்னோ அணி தோல்வி

மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக வந்த பிறகு உள்நாட்டில் முக்கிய வீரர்கள் இல்லாத நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது பெரிய விமர்சனத்தை உருவாக்கியது. இந்த நிலையில் கடைசி போட்டியை வென்று பாபர் அசாம் அணி தொடரை சமன் செய்திருக்கிறது. இன்றைய போட்டியில் பாபர் அசாம் மொத்தம் எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.