“இந்திய வீரர்கள் இல்லை.. இவர்தான் உலக கோப்பையில் நிறைய சதங்கள் அடிக்க போகிறார்!” – கம்பீர் கணிப்பு

0
1350
Gambhir

இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்புக்கு நடந்து வரும் பயிற்சி போட்டிகள் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. மழையின் காரணமாக பயிற்சி போட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன!

இந்த நிலையில் மழை நிற்காமல் பெய்து வரும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் இந்திய அணி நாளை நெதர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது என்பது கவலையான ஒரு விஷயம்!

- Advertisement -

அக்டோபர் நான்காம் தேதி எந்தப் போட்டிகளும் இருக்காது. ஐந்தாம் தேதி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பையில் துவக்க போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியிருக்கிறது. இந்திய அணி இந்த முறை வலிமையான அணிகளை முதலில் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணிக்கு எந்த ஒரு மைதானத்திலும் இரண்டு போட்டிகள் கிடையாது.

உலகக் கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளில் ஏறக்குறைய எல்லா அணிகளிலும் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது இந்த உலகக் கோப்பையில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக விராட் கோலி சச்சினின் ஒரு நாள் கிரிக்கெட் சத சாதனையை முறியடிப்பாரா என்றும்? ஒட்டுமொத்தமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரராக ரோஹித் சர்மா மாறுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் “ரோகித்துக்கு நிறைய எபிலிட்டி இருக்கிறது. மேலும் இவர்கள் சொந்த நாட்டில் விளையாடுகிறார்கள். ரோகித் சர்மா மூன்று இரட்டை சதங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். எனவே அவர் ஆவலுடன் காத்திருப்பார் என்று நான் நம்புகிறேன். தற்பொழுது உலக கோப்பையில் இதை இந்தியாவுக்கு மாற்ற நினைப்பார்.

பாகிஸ்தானின் பாபர் அசாமிடம் உள்ள நுட்பம், பாகிஸ்தானுக்காக இந்த முறை அவர் மூன்று அல்லது நான்கு சதங்களை அடிப்பார் என்று நான் நினைக்கிறேன்.

பாபர் அசாம் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக இருக்க முடியும். பேட்டிங் டைமிங் நிறைய இருக்கும் வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். ரோஹித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் திறமையானவர்கள். ஆனால் பாபர் அசாம் வேற லெவல் பிளேயர்!” என்று கூறியிருக்கிறார்!