“கில் ஜெய்ஸ்வால் இல்லை.. ரோகித் கூட இவர்தான் ஓபன் பண்ணனும்” – இந்திய முன்னாள் வீரர் தேர்வு!

0
183
Gill

இந்திய அணி முதல்முறையாக இரு நாடுகளுக்கு இடையேயான வெள்ளைப் பந்து தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இன்று விளையாடுகிறது.

இந்தப் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு மூத்த வீரர்களும் 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள்.

- Advertisement -

விராட் கோலி வழக்கம் போல் மூன்றாவது இடத்தின் பேட்ஸ்மேனாக தொடர, ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலமாக இது அப்படியே டி20 உலகக் கோப்பை தொடரிலும் தொடர போகிறது என்பது உறுதி.

இதற்கு அடுத்து ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரராக வருவது உறுதியான நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் கில் என அணியில் மேலும் இரண்டு துவக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். இன்றைய போட்டியில் ரோகித் சர்மா உடன் இவர்கள் இருவரில் யார் துவக்க ஆட்டக்காரராக வாய்ப்பை பெறுவார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

கில் ஜெய்ஸ்வாலை விட அதிக சர்வதேச அனுபவம் பெற்றவராக இருக்கிறார். மேலும் அவர் தன்னை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிரூபித்த வீரராகவும் இருக்கிறார். அதே சமயத்தில் ஜெயஸ்வால் முதல் பந்தில் இருந்து அதிரடியாக துவங்குவதோடு, இடது வலது பேட்டிங் காம்பினேஷனை கொடுக்கிறார்.

- Advertisement -

இதில் பெரும்பாலானவர்கள் ரோகித் சர்மா உடன் ஜெய்ஷ்வால் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதில் கில்லுக்கு பெரிய ஆதரவு கிடையாது. ஆனால் இவர்கள் இருவரையும் தள்ளி வைத்து வேறு ஒருவரை துவக்க ஆட்டக்காரராக கொண்டுவர வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “என்னைப் பொறுத்தவரை விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் விளையாடுவதில் சிறந்தவர். நீங்கள் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை என்றால், பவர் பிளே முடிந்து சுழற் பந்துவீச்சில் ரன்கள் கொண்டுவர அவர் கொஞ்சம் சிரமப்படுவார். இது நடந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆனாலும் ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் இல்லை கில் இருவரில் ஒருவர் பேட்டிங் செய்வார். விராட் கோலி துவக்க ஆட்டக்காரராக வருவதை நான் பார்க்கவில்லை. அவரை மூன்றாவது இடத்தில்தான் எப்படியும் விளையாட வைப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்!