சந்தேகமே வேண்டாம்.. உலக கோப்பையில் கவனிக்க வேண்டியவராக இந்த இந்திய வீரர்தான் இருப்பார்.. இலங்கை ஆல்ரவுண்டர் கணிப்பு!

0
1425
Gill

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த அக்டோபர் மாதம் துவங்கி விட்டது. இன்னும் நான்கு நாட்கள் கழித்து உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது.

வழக்கம்போல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் என்றாலே மற்ற வடிவங்களுக்கான உலகக் கோப்பை தொடரை விட கூடுதல் எதிர்பார்ப்பும் உற்சாகமும் கிரிக்கெட் ரசிகர்களிடம் தாண்டி வீரர்களிடமும் இருக்கும்.

- Advertisement -

இந்த எதிர்பார்ப்புக்கும் உற்சாகத்திற்கும் முன்னாள் வீரர்களும் விதிவிலக்கானவர்கள் கிடையாது. பல முன்னால் வீரர்களும் தங்களுடைய அறையில் மற்றும், சிறந்த வீரர்கள் யார்? என்பது குறித்து கணிப்பை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் சிறந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருமான பர்வேஸ் மகரூப் தன்னுடைய இரண்டு விதமான உலகக் கோப்பை குடித்தான கணிப்புகளை கூறியிருக்கிறார்.

அவர் கூறும் பொழுது “இது மிகவும் சுவாரசியமான உலகக்கோப்பை ஆக இருக்கும். சில அணிகள் நல்ல ஃபார்ம் மற்றும் கலவையில் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியாவைப் பொறுத்தவரை சுப்மன் கில் நிறைய ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு உலகக் கோப்பை சிறந்த வாய்ப்பாகும்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் இருந்து நட்சத்திர அந்தஸ்தை எடுத்து வரக்கூடிய வீரராக இருப்பதால், இது ஒரு திருப்புமுனை போட்டியாகவும் இருக்கும். என்னை பொருத்தவரை இந்த உலகக் கோப்பையில் கவனிக்கத்தக்க வீரராக இருப்பார்.

என்னைப் பொறுத்தவரை அரையிறுதிக்கு இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து 3 அணிகள் மிக உறுதியாக இருக்கும். இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆகிய மூன்று அணிகள் நான்காவது அணிக்கான இடத்திற்கு போட்டியிடும்!” என்று கூறியிருக்கிறார்!