சிஎஸ்கே வீரருக்கு துரோகம் செய்து, இந்தியாவை உலகக்கோப்பை பெறவிடாமல் செய்ததே விராட் கோலி, ரவி சாஸ்திரி இருவரும் தான் – திடீர் ஷாக் கொடுத்த அணில் கும்ப்ளே!

0
5760

‘2019 உலககோப்பையில், விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் சேர்ந்து செய்யக்கூடாத தப்பை செய்துவிட்டார்கள். கோப்பையை இழந்துவிட்டோம்.’ என அனில் கும்ப்ளே திடுக்கிடும் பேட்டியை கொடுத்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

அப்போது இந்திய அணி தேர்வு செய்வதில் பல குழப்பங்கள் நிலவியத்தை பார்க்க முடிந்தது. குறிப்பாக நீண்டகாலமாக நான்காவது இடத்திற்கு யார் விளையாடுவார்? என்கிற கருத்துக்கள் நிலவி வந்தபோது, சில வருடங்களாக அம்பத்தி ராயுடு அந்த இடத்தில் விளையாடி நம்பிக்கையை பெற்றிருந்தார். அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்றும் கருத்துக்கள் நிலவின.

55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடிருக்கிறார் ராயுடு. பெரும்பாலான போட்டிகளில் நான்காவது இடத்தில் விளையாடி நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். உலகக்கோப்பைக்கு முன்பாக 2018 முதல் மார்ச் 2019 வரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 650 ரன்கள் அடித்துள்ளார். அதில் ஐந்து அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.

- Advertisement -

இப்படி சிறப்பான ஃபார்மில் இருக்கும் ராயுடுவை கடைசி நேரத்தில் உலகக்கோப்பையில் எடுக்காமல் கேஎல் ராகுலை நான்காவது இடத்திற்கு விளையாட வைத்தனர். மேலும் ராயுடு இடத்திற்கு விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். இது ராயுடு மற்றும் பிசிசிஐ இடையில் பனிப்போராக மாறியது. கடைசியில் ராயடு ஓய்வு முடிவு அறிவித்தார். அடுத்த ஒரு வருடங்களில் அதை திரும்ப பெற்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இந்த விஷயத்தில் தலையிட்டு ராயுடுவை அணியில் எடுத்திருக்க பரிந்துரை செய்திருக்க வேண்டும். அங்குதான் தவறு நேர்ந்து விட்டது. இதனால் உலக கோப்பையை இழக்க நேரிட்டது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஜாம்பவான் அணில் கும்ப்ளே.

“2019ஆம் ஆண்டு உலககோப்பையில் ராயுடு விளையாட வைக்கப்பட்டிருக்க வேண்டும். நான்காவது இடத்திற்கு நீண்ட காலமாக இவர் தான் தயார் செய்யப்பட்டு வந்தார். கடைசி நேரத்தில் இவரை அணியில் எடுக்காமல் இவரது பெயரை எந்த இடத்திலும் இல்லாதவாறு செய்தது முற்றிலும் தவறு. ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி இருவரும் இந்த இடத்தில் பெரிய தவறை செய்துவிட்டார்கள். அணி நிர்வாகத்திடம் மற்றும் பிசிசிஐ இடம் இது குறித்து பேசி அவரை எடுத்திருக்க வேண்டும். கோப்பையை இழக்கவும் நேரிட்டது. இந்த தவறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று கூறியுள்ளார்.

- Advertisement -