தோனி இல்ல .. இவர்தான் ஒரிஜினல் கேப்டன் கூல்.. இந்திய அணியின் முன்னாள் கேப்டனை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!

0
1554

இந்திய அணி முதல் முதலாக உலகக்கோப்பையை வென்று இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது . 1983 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது உலக கோப்பை இறுதிப் போட்டியில் அன்றைய கிரிக்கெட் ஜாம்பவான்களான வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று முதல்முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .

அந்த உலகக் கோப்பை வெற்றி தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது . அந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணி உலக கிரிக்கெட்டில் ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்தது . முதல் இரண்டு உலக கோப்பை போட்டிகளிலும் லீக் சுற்றோடு வெளியேறிய இந்தியா மூன்றாவது உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது உலக நாடுகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது .

- Advertisement -

இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றியில் அன்றைய இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டரான கபில்தேவின் பங்கு மிக முக்கியமானது அந்தத் தொடர் முழுவதுமே கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து துறைகளிலும் அணிக்கான தனது பங்களிப்பை வழங்கினார் கபில்தேவ் . முக்கியமான ஆட்டத்தில் ஜிம்பாவே அணிக்கு எதிராக 17 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது களத்திற்கு வந்த கபில் தேவ் சூறாவளியாக மாறி அடித்த 175 ரன்கள் உலகக்கோப்பை வரலாற்றில் இன்று வரை சிறந்த ஒரு இன்னிங்ஸ் ஆக பார்க்கப்படுகிறது .

மேலும் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அணியும் இரண்டு முறை உலக சாம்பியனுமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 183 ரன்கள் மட்டுமே எடுத்து விவியன் ரிச்சர்ட்ஸ்,கிளைவு லாயிட்,டிஸ்மண்ட் ஹெயின்ஸ், கார்டன் கிரீன்டீச் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை நூத்தி நாப்பது ரன்களில் ஆல் அவுட் செய்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தது கபில் தேவின் தன்னம்பிக்கை மிகுந்த கேப்டன் பொறுப்பு தான் .

இந்தியாவின் முதல் உலகக்கோப்பை வெற்றி பெற்று 40 வருடங்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் 1983 உலக கோப்பையில் விளையாடிய வருமான இந்தியாவின் கிரிக்கெட் லெஜன்ட் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று தந்த கேப்டன் கபில் தேவ் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் . இந்திய அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றியின் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் தனது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்து இருக்கிறார் சுனில் தவஸ்கர் .

- Advertisement -

அந்த பேட்டியில் பேசியிருக்கும் அவர்” 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கபில் தேவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது . இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் . இறுதிப் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் ரிச்சர்ட்ஸ் கேட்சை பிடித்து போட்டியையே இந்தியாவிற்கு சாதகமாக மாற்றினார் கபில் தேவ் . இந்த உலகக் கோப்பையில் அவருடைய கேப்டன்சி சக்தி வாய்ந்த ஒன்றாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது . எந்த ஒரு வீரர் களத்தில் தவறு செய்தாலும் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுப்பார் கபில் தேவ் . உண்மையான கேப்டன் கூல் என்றால் அது கபில் தேவ தான்” என தெரிவித்து இருக்கிறார் கவாஸ்கர் .

மேலும் உலகக்கோப்பை வெற்றி பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி உலகச் சாம்பியன் ஆக முடி சூட்டிக்கொண்டது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் . அந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது . அது உணர்ச்சிகளின் வெளிப்பாடு” என்று தெரிவித்தார் மேலும் உலக கோப்பையை எங்கள் கைகளில் வாங்கிய தருணம் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தந்தது” என்று கூறினார்.