தோனி இல்லை.. கடைசி 10 ஓவர்களில் கேப்டன்ஸ் பயப்படுற இந்திய வீரர் இவர் தான்.. கோலி அஸ்வினிடம் சொன்ன தகவல்.!

0
2687

இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்று நடைபெறும் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மோத இருக்கின்றன.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் எடுத்திருக்கிறார். மேலும் இந்திய அணி விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் அணிக்கு சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தவர். மேலும் இந்தத் தொடரில் அதிக சிக்ஸர்கள் எடுத்திருக்கும் வீரரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்குப் பிறகு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 2021 மற்றும் 22 ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றார்.

அதன் பிறகு அவர் வெள்ளை பந்து போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இவர் தனது யூடியூப் சேனலின் மூலம் கிரிக்கெட் பற்றிய விமர்சனங்களையும் தனது கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அஸ்வின் இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றிக்கு ரோகித் சர்மாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் கடந்த உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா ஐந்து சதங்கள் எடுத்ததை சுட்டிக்காட்டி அஸ்வின் கஷ்டமான டேட்டிங்கையும் எளிமையான பேட்டிங் போல் காட்டுவது தான் ரோஹித் சர்மாவின் ஸ்டைல் எனக் கூறினார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை பற்றி விவாதித்த அஸ்வின். ரோகித் சர்மா பற்றி 5=6 ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி உடன் நடந்த சுவாரஸ்யமான உரையாடலை பகிர்ந்தார். இதுகுறித்து பேசிய அஸ்வின்” சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பு ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது நானும் விராட் கோலியும் பேசிக் கொண்டிருந்தோம். அது எந்த போட்டி என்று சரியாக ஞாபகம் இல்லை. கடைசி 15 முதல் 20 ஓவர்களில் ரோகித் சர்மாவிற்கு எங்கு பந்து வீசுவது என யோசித்துக் கொண்டிருந்தேன்.

- Advertisement -

அப்போது குறுக்கிட்ட விராட் கோலி “இறுதி ஓவர்களில் கேப்டனின் கெட்ட கனவு யார் தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். நான் அது தோனியா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு பதில் அளித்த விராட் கோலி ” இல்லை ரோகித் சர்மா தான் இறுதி 15 முதல் 20 ஓவர்களில் எதிரணி கேப்டனின் கெட்ட கனவு ” என்று பதிலளித்தார். இதற்கு நான் என்ன காரணம் என்று அவரிடம் கேட்டேன், அதற்கு பதில் அளித்த விராட் கோலி அவருக்கு எங்கு பந்து வீசுவது என்று நம்மால் யோசிக்க முடியாது என தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 264 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார் ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஒரு நாள் போட்டிக்கான ஸ்கோர் இதுவாகும். மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 இரட்டை சதங்கள் எடுத்த ஒரே வீரர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 30 ஓவர்களை தாண்டி பேட்டிங் செய்து விட்டால் நிச்சயமாக இரட்டை சதம் எடுப்பார் என்பது அனைவரின் நம்பிக்கையுமாக இருக்கிறது. இதற்கு முன்பும் அவரது செய்து காட்டியிருக்கிறார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 41-50 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த ஒரே இந்திய வீரரும் ரோஹித் சர்மா தான். இவர் 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பத்து ஓவர்களில் அதிகபட்சமாக 110 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பத்துபவர்களில் 107 ரன்கள் குவித்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பத்துபவர்களில் 96 ரன்கள் எடுத்திருக்கிறார் ரோகித் சர்மா. இவரைத் தவிர வேறு எந்த இந்திய வீரரும் கடைசி 10 ஓவர்களில் 85 ரன்கள் தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.