“இந்த வருஷமும் சிஎஸ்கே & ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு இல்லை கப் அடிக்க போற டீம் இதுதான்” – இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து

0
24476

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது . 16 வது சீசனாக நடைபெறும் இந்த போட்டி தொடரில் இதுவரை 47 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன .

நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது . சென்ற முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது .

- Advertisement -

இந்தப் போட்டித் தொடரின் துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி ஒரு சில தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் 48 வது போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன .

இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது . ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் ஜாம்பவான் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டது .

ஆனால் போட்டித் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்த்தால் மற்ற அணிகளுக்கே வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் . இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி .

- Advertisement -

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் பற்றி பேசிய ரவி சாஸ்திரி ” தற்போது அணிகள் ஆடி வரும் விதம் மற்றும் ஃபார்மை வைத்து பார்க்கும் போது குஜராத் அணி தான் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்று நான் கருதுகிறேன்.ஷஅந்த அணி ஒரு மிகச்சிறந்த செம பலத்தில் இருக்கிறது . ஒரு வெற்றிகரமான t20 அணிக்கு தேவையான அத்தனை சிறப்பம்சங்களும் அந்த அணியில் இருக்கின்றன . என்னுடைய கணிப்புப்படி இந்த வருடம் கோப்பையை வெல்லும் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிதான்” என தெரிவித்திருக்கிறார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு மிகச் சிறந்த கேப்டனாக உருவாகி வருகிறார் . அவர் அணியை கையாளும் விதம் பாராட்டும் வகையில் உள்ளது . ஒவ்வொரு போட்டியிலும் முதிர்ச்சி அடைந்த கேப்டனாக அவர் உருவாகி வருவது இந்திய கிரிக்கெட் இருக்கு மகிழ்ச்சியான ஒன்று . தங்கள் அணியில் இருக்கும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களையும் அவர் கையாளும் விதம் பாராட்டுக்குரியது . ஒரு சாதாரண கேப்டனால் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை ஒரு அணியில் வைத்து கையாள்வது என்பது கடினமான ஒன்று . ஆனால் சஞ்சு அதை மிக எளிதாக செய்கிறார்” என பாராட்டினார் ரவி சாஸ்திரி.