“எந்த பயிற்சியாளராலும் இந்த வீரரை உருவாக்கவே முடியாது!” – இந்திய பவுலிங் கோச் வித்தியாசமான பேச்சு!

0
618
Mhambrey

கிரிக்கெட் மிக வேகமாக நவீனமடைந்து கொண்டே இருக்கிறது. இதனால் பயிற்சி முறைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பயிற்சியாளர்கள் தற்போது மிகவும் துல்லியமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் நிறைய விஷயங்களில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

தற்பொழுது ஒவ்வொரு பெரிய சர்வதேச அணிக்கும் பயிற்சியாளர்கள் குழு என்பது மிகப்பெரியது. எல்லாவற்றுக்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர்களை ஒருங்கிணைத்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ஒருவர் இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர், பில்டிங் பயிற்சியாளராக திலீப் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராக பராஸ் ம்ஹாம்ப்ரே ஆகியர் கொண்ட குழு இருந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்பாக பேசி உள்ள இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் கூறும்பொழுது “முகமது சமி போன்ற ஒரு பந்துவீச்சாளரை, ஒரு பயிற்சியாளரால் உருவாக்க முடியும் என்று நான் சொன்னால், நான் சொல்வது பொய். ஒவ்வொரு முறையும் ஒரு பந்துவீச்சாளர் அப்ரைட் சீமில் தரையிறக்க முடியும் என்றால், உலகில் எல்லா பந்துவீச்சாளர்களும் சமியாகவே இருப்பார்கள்.

இது சமி தன்னுடைய அபாரமான உழைப்பாலும் பயிற்சியாலும் உருவாக்கிக் கொண்டது. சீம் மற்றும் சரியான மணிக்கட்டு நிலையில், பந்தை உள்ளே வெளியே என்று வீசுவது ஒரு அரிய திறமை.

- Advertisement -

பும்ராவும் தனது அரிய பந்துவீச்சு ஆக்சன் திறமையால் பந்தை உள்ளே வெளியே என்று நகரத்த செய்கிறார். இது ஒரு கலை. இந்த கலையை கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கச்சிதமானதாக மாற்றுகிறது.

எங்களிடம் ஆரம்பத்தில் பும்ரா, சமி, இஷாந்த் சர்மா மூன்று பேர் இருந்தார்கள். இந்த வகையான மேஜிக்கை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். உண்மையில் இவர்கள் இந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவோ கனவில் நினைக்கவும் கூட இல்லை.

நாங்கள் பொறுப்பேற்ற அதற்குப் பிறகு அடுத்த இரண்டு வருடத்தில் தேவையான பென்ச் ஸ்ட்ரென்த்தை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த கட்டத்தில் நாங்கள் இன்னும் மூன்று முதல் ஐந்து பந்துவீச்சாளர்களை கண்டறிய வேண்டும். மேலும் அவர்களுக்கு போதுமான ஆட்டம் கிடைப்பதற்கும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும். எங்கள் பேச்சாளர் குழுவில் இருக்கும் அனைவரும் சேர்ந்துதான் சரியான பந்துவீச்சாளர்களைக் கண்டறிந்தோம்!” என்று கூறியிருக்கிறார்!