பும்ரா இல்லை.. இந்த 28 வயசு பவுலர்தான் ரோகித்க்கு பெரிய காரியம் பண்ண போறாரு – முகமது கைஃப் ஆச்சரியமான தேர்வு!

0
2873
Bumrah

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தனது சொந்த நாட்டில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு முன்பாக, அதற்குப் பயிற்சி களமாக அமையக்கூடிய ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் இரண்டாம் தேதி இலங்கையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பிக்கிறது!

இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிக முக்கியமான தொடர்களாக அமைந்திருக்கின்றன. உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்படும் இந்திய அணிக்கு ஒரு ஒத்திகையாக, தற்பொழுது ஆசிய கோப்பைக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆசியக் கோப்பை என்கின்ற காரணத்தினால் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணி மட்டுமே அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் காயத்திலிருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திரும்ப வந்திருக்கிறார். மேலும் முகமது சிராஜ் மற்றும் முகமது சமி என மிக வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணி அமைந்திருக்கிறது.

ஆசியக் மற்றும் இந்திய மண்ணில் நடைபெறும் இரண்டு தொடர்களுக்கும் தற்பொழுது எடுத்துக் கொண்டால், பிரதான சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே இருக்கிறார். மற்றவர்கள் இருவரும் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்கின்ற வகையில் வரக்கூடிய ஜடேஜா மற்றும் அக்சர் படேல்தான்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இந்திய அணியை கணிக்கும் பொழுது கூட, இந்திய அணி தனது வலுவான பேட்டிங்கை நம்பி மட்டுமே களம் இறங்குகிறது, அவர்களுடைய பந்துவீச்சு தாக்குதல் பெரிய அளவில் கிடையாது, முழுமையான பந்துவீச்சாளர்கள் என்றால் பும்ரா மற்றும் சமி மட்டுமே என்பதாக கூறியிருந்தார்.

- Advertisement -

எந்த ஒரு அணிக்கும் கேப்டனுக்கும் நடு வரிசை ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தி தருகின்ற திறமை படைத்த திருப்புமுனையை உண்டாக்கக்கூடிய பந்துவீச்சாளர்கள் கட்டாயம் தேவைப்படுகிறார்கள். நடுவரிசை ஓவர்களில் வீழ்த்தப்படும் விக்கட்டுகள்தான் அணிக்கு வெற்றியை பெற்று தரும்.

தற்பொழுது இந்த உலகக் கோப்பை தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அப்படியான பந்துவீச்சாளராக யார் இருப்பார்கள் என்று கூறியுள்ள முகமது கைஃப் ” ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுக்கான பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ்தான் இருப்பார். இந்த இரண்டு தொடர்களிலும் சிறப்பான பந்துவீச்சு பார்மில் இருக்கும் குல்திப் யாதவ் எப்படி பந்து வீசப் போகிறார் என்பதை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன். விக்கெட் டேக்கரான அவர் பந்தை திருப்பியும் பிளைட் செய்தும் பேட்ஸ்மேன்கள் ரன்னுக்கு போகும்போது அசத்துவார். இது மிகச் சிறந்த போட்டியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!