பும்ரா ஸ்டார்க் இல்லை.. இந்த 2 பேர்தான் வேகத்தில் கலக்க போறாங்க.. நியூசி ஷேன் பாண்ட் அதிரடி கணிப்பு!

0
2196
Bumrah

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் பயிற்சி போட்டிகளில் மூலம் நேற்று முன்தினம் ஆரம்பமாகிவிட்டது. முதல் போட்டி வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்குகிறது!

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருப்பதால் இரண்டு விஷயங்கள்முக்கியமானதாக மாறுகிறது. பந்துவீச்சில் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சு இரண்டும் கவனிக்கத்தக்க வேண்டிய சில விஷயங்களை கொண்டு இருக்கிறது.

- Advertisement -

பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படும். சில நேரங்களில் முழுக்க பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். இதன் காரணமாக இந்தியாவில் வேகப்பந்து வீச்சு என்பது மிகவும் சிக்கலான ஒரு விஷயம்.

இந்த நிலையில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வேகப்பந்து வைத்தார்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது சுவாரசியத்தை உண்டாக்கும் ஒரு கேள்வியாக இருக்கிறது.

இந்திய ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் திடீரென தங்களது லென்த்தை மாற்ற வேண்டும், சில ஆடுகளங்களுக்கு பந்தின் வேகத்தை மாற்ற வேண்டும். இப்படி வேகப்பந்துவீச்சாளர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே இந்தியாவில் வெற்றி பெற முடியும்.

- Advertisement -

இந்த நிலையில் கிரிக்கெட்டில் சில காலம் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக இருந்திருந்தாலும், இருந்த காலம் வரையில் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
“மார்க் வுட் எப்பொழுதும் தனிச்சிறப்பான வீரர். அவருக்கு நல்ல வேகம் இருக்கிறது. அவர் இந்தியாவில் வெற்றி பெறுவார் என்று நான் நினைக்கிறேன். வேகம் மட்டும் போதாது பந்தை நகர்த்தவும் செய்ய வேண்டும். இந்த இடத்தில் நியூசிலாந்தின் பெர்குஷன் என இருவருமே சிறப்பாக இருப்பார்கள்.

ஷாகின் அப்ரிடி பந்து வீசுவதை நான் எப்பொழுதும் விரும்பி இருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு நான் நியூசிலாந்து ஏ அணியை யுனைடெட் அரபு எமிரேடுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவருக்கு அப்பொழுது 19 வயதுதான் ஆகியிருந்தது. அவர் பந்து வீசும் பொழுது எப்பொழுதும் ஏதாவது நடக்கும் என்பது போல் இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!