“பாபர் கிடையாது.. பாகிஸ்தானை இவர்தான் காப்பாத்துவார்.. அதனால அஷ்வினை எடுங்க!” – கவாஸ்கர் அதிரடியான யோசனை!

0
706
Ashwin

இன்று 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் உள்ளாகி இருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மதியம் துவங்கி நடைபெற இருக்கிறது!

பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் இலங்கைக்கு எதிராக விளையாடிய அணியில் இருந்து எந்த விதமான மாற்றங்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. வென்ற அணியை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடம் பென்ஞ் வலிமை சிறப்பாக இல்லை.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் விளையாடு இருந்தாலும் இரண்டு போட்டிகளிலும் ஒரு மாற்றம் இருந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுகளத்திற்கு தகுந்த அணியையே தேர்வு செய்வோம் என்று கூறியிருந்தார்.

இந்த அடிப்படையில் சென்னை ஆடுகளத்தில் விளையாடிய ரவிச்சந்திரன், சிறிய மைதானம் மற்றும் பேட்டிங் செய்ய சாதகமான டெல்லி ஆடுகளத்தில் விளையாடவில்லை. அவருடைய இடத்தில் சர்துல் தாக்கூர் இடம் பெற்றார்.

அந்த போட்டியில் ஆறு ஓவர்கள் வீசிய சர்துல் தாக்கூர், ஓவருக்கு ஆறு ரன்கள் குறைவாக கொடுத்ததோடு ஒரு நல்ல கேட்ச் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று போட்டியை அகமதாபாத்தில் நடைபெறுகின்ற காரணத்தினால் அவர் விளையாடுகின்ற மாதிரி இருந்தால் முகமது சமியை விளையாட வைக்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் சாமி இந்த மைதானத்தை சொந்தமாக கொண்டிருக்கிறார். மேலும் சிறப்பாகவும் செயல்பட்டு இருக்கிறார்.

தற்பொழுது இந்த இடம் குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “அஸ்வின் ஒரு ஆப் ஸ்பின்னர் என்பதால் நான் அவரை அணியில் சேர்க்க சொல்லவில்லை. அவர் இடதுகை வீரருக்கு எதிராக பந்தை திருப்புவார். ஆனால் அஸ்வின் மனதளவில் எதிர் வீரர்களை சோதிக்கிறார்.

இதன் காரணமாகவே அவரை நான் அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறேன். மேலும் உங்களுக்கு எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றால், அந்த இடத்தில் வந்து அவரால் 20, 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியும்.

மேலும் கீழ் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன் சவுத் சகில் இருக்கிறார் என்ற காரணத்திற்காகவே நான் அஸ்வினை தேர்வு செய்வேன். பாகிஸ்தானை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நல்ல நிலைக்கு கொண்டு செல்லக்கூடியவராக இருக்கிறார். அவருக்கு எதிராக உங்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான வீரர் தேவை!” என்று கூறி இருக்கிறார்!