“6வது பவுலர் இல்லையா?.. அப்ப இந்த இன்-ஸ்விங் பவுலர் யாரு?” – கோலியை வைத்து கலகலப்பாக்கிய டிராவிட்!

0
605
Virat

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பையில் இனி விளையாட மாட்டார் என செய்தி காலையில் வந்திருக்கிறது!

மேலும் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு வலது கை வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி தற்போது உலகக் கோப்பையில் மிகவும் சிறப்பான செயல்பாட்டை கொண்டு வலிமையாக புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்திய அணியிடம் பாசிட்டிவாக பந்து வீச்சும் பீல்டிங்கும் இந்த முறை மிகவும் நன்றாக இருக்கிறது. இது இதுவரை பார்த்த இந்திய அணியில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது. இதுவே தற்போது புள்ளி பட்டியலிலும் வித்தியாசத்தை உண்டு செய்திருக்கிறது.

நாக் அவுட் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணியில் மாற்றுவீரரே இல்லாத ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகி இருப்பது நிச்சயம் பின்னடைவுதான் என்பதில் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களுடன்தான் கடைசி மூன்று போட்டிகளை விளையாடி அசத்தலாக வென்றும் இருக்கிறது. ஆறாவது பந்துவீச்சாளராக இந்திய அணியில் தற்போதைக்கு யாரும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை. தற்பொழுது இதுவே இந்திய அணியின் குறையாகவும் மாறி இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் கூறும் பொழுது “உண்மைதான் எங்களிடம் ஆறாவதாக பந்து வீசுவதற்கான தேர்வு இல்லாமல்தான் இருக்கிறது. ஆனால் எங்கள் அணியில் தவறான முறையில் கால் வைத்து வீசக்கூடிய ஒரு இன்-ஸ்விங்கர் இருக்கிறார். அவரை கடந்த போட்டியில் கூட பந்து வீச சொல்லி ரசிகர்கள் மிகவும் நெருக்கடி செய்தார்கள். எங்கள் அணியின் வீரர்களிடம் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கிறது.

விராட் கோலி உண்மையிலேயே இந்தியாவுக்காக இதுவரை என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதை மிகவும் நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய பிறந்தநாளில் 49 வது சதம் இல்லை 50-வது சதம் என்று எதையும் எடுத்துக் கொள்வது கிடையாது!” என்று விராட் கோலியை முன்வைத்து கூறியிருக்கிறார்!