ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய நிதிஷ் குமார்.. 3வது டெஸ்டிலும் இந்தியா அபாரம்.. மிரட்டல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ஜோ ரூட்

0
259

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியை கிரிக்கெட் சாம்பியன் சச்சின் டெண்டுல்கர் மணி அசைத்து தொடங்கி வைத்தார்.  முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி, பென் டக்கட் ஆகியோர் இயல்புக்கு மாறாக பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாகவும் இருந்தது.

- Advertisement -

ஒரே ஒவரில் 2 விக்கெட்டுகள்:

அது மட்டுமில்லாமல் வெயிலும் அடித்ததால் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் என உரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கு காரணம் லண்டன் ஆடுகளத்தில் முதல் செஷனில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என கணிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் சிராஜ், பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோரின் பவுலிங்கில் விக்கெட் கிடைக்கவில்லை. பென் டக்கட் 40 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்த 2 பந்துகள் கழித்து நிதிஷ் குமார் ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான ஜாக் கிராலி 18 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் 44 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

- Advertisement -

ஜோ ரூட் மிரட்டல் ரெக்கார்ட்:

இந்த சூழலில் களத்திற்கு வந்த ஜோரூட் மற்றும் ஆலிபோப் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். தற்போது 25 ஓவர் முடிவில் மதிய உணவு நேர இடைவெளியின் போது இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதையும் படிங்க: களத்தில் மட்டுமல்ல, களத்திற்கும் வெளியேயும் சுப்மன் கில் சிறந்த கேப்டனாக இருக்கிறார்.. எடுத்துக்காட்டுடன் பாராட்டிய அஸ்வின்

லண்டன் லார்ட்ஸ் மைதானம் ஜோ ரூட்டுக்கு மிகவும் ராசியான மைதானமாகும். இங்கு அவர் முதல் இன்னிங்ஸில் 11 முறை விளையாடி 708 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 70 ஆகும். ஒரு அரை சதம், மூன்று சதம் அடித்துள்ளார். இதனால் ஜோ ரூட் விக்கெட்டை விரைவில் இந்தியா கைப்பற்றினால் மட்டுமே லார்ட்ஸ் போட்டியில் வெற்றி பெற முடியும்.

- Advertisement -