களத்தில் மட்டுமல்ல, களத்திற்கும் வெளியேயும் சுப்மன் கில் சிறந்த கேப்டனாக இருக்கிறார்.. எடுத்துக்காட்டுடன் பாராட்டிய அஸ்வின்

0
33

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், வெளிநாட்டு ஊடகங்களை சிறப்பாக கையாள்வதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஓய்வுக்கு பிறகு , சவாலான நேரத்தில் அணியை தலைமை தாங்கினார் சுப்மன் கில்.

முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, 371 ரன்கள் நிர்ணயித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆனால், 2வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் 269 ரன்கள் மற்றும் 161 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் பும்ரா இல்லாமல் , இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

சுப்மன் கில்லுக்கு பாராட்டு

இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன், அவரது வெளிநாட்டு டெஸ்ட் போட்டி ஃபார்ம் குறித்து பலர் கேள்வி எழுப்பினர். இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டங்கள் அனைத்து விமர்சகர்களுக்கும் பதிலளித்தன. இந்த சூழலில் அஸ்வின், கில்லின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தையைப் பாராட்டினார்.

“சுப்மனுக்கு இயல்பான திறமை உள்ளது. நான் அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பைப் பார்த்தேன், அவர் எந்தவித நடிப்பும் இல்லாமல், தன்னைப் போலவே பேசுவதை உடனடியாகக் கண்டேன். அவர் தனது இயல்பான தன்மை மற்றும் திறன்களுக்கு ஏற்ப அணியை வழிநடத்துகிறார்,” என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறினார்.

- Advertisement -

கேப்டனை குறிவைப்பார்கள்:

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில், ஊடகங்கள் கேப்டனை இலக்காகக் கொண்டு அணியை தாழ்த்த முயற்சிக்கின்றன என்று அஸ்வின் சுட்டிக்காட்டினார். இது குறித்து பேசிய அவர், “வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில், கேப்டனை இலக்காக்கி அணியை தாழ்த்துவது எளிதாகிறது. கேப்டனை வீழ்த்தினால், அணி ஒன்பது பின்ஸ் போல விழுந்துவிடும்.”

இதையும் படிங்க: 3வது டெஸ்ட்.. கில் காட்டிய புத்திசாலித்தனம்.. ஸ்டோக்ஸ் ஆச்சரிய முடிவு.. மாற்றங்களில் புதுமை

“தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், ஆனால் பல வீரர்கள் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று பயிற்சி பெற்றவர்கள். ஆனால், சுப்மன் கில்லுக்கு அது தேவையில்லை. அவர் தன்னம்பிக்கையுடன் செயல்படும் ஒரு மனிதராகத் தெரிகிறார்” என்று அஸ்வின் கூறினார். இந்த தொடரில் சுப்மன் கில் மொத்தமாக 585 ரன்கள் அடித்துள்ளார். அவருடைய சராசரி 146.25 ஆக உள்ளது.

- Advertisement -