600 ரன்னுக்கு அதிகமா அடிப்பேன்.. எங்க டீமோட முக்கிய பிளேயர் இவர்தான் – சவால் விடும் கேகேஆர் வீரர்

0
32
KKR

இந்த வருடம் 17ஆவது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்கதாகவே காணப்படுகிறது. நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மெதுவாகவும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் காணப்பட்டது.

இதன் காரணமாக அந்த அணி நடக்க இருக்கும் ஐபிஎல் சீசனில் சிறப்பான முறையில் செயல்படலாம். ஏனென்றால் அவர்கள் அணியில் சுழல் பந்துவீச்சாளர்களாக சுனில் நரைன், சக்கரவர்த்தி, சுயாஸ் சர்மா, முஜீப் மற்றும் அனுக்குல் ராய் என நல்ல சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் கடந்த ஐபிஎல் சீசனில் அவர்களுக்கு ஒரு இந்திய பேட்ஸ்மேன் குறைவாக இருந்தார். தற்போது அந்த இடத்திற்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு கடந்த சீசனில் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீச பந்து வீச்சாளர்கள் இல்லை. இதற்காகவே 24.75 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்திரேலியாவின் மிச்சல் ஸ்டார்க்கை வாங்கியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு தேவைப்பட்ட எல்லாமே நடந்திருப்பதால், இந்த ஐபிஎல் சீசனில் அவர்கள் சிறப்பான அணியாக காணப்படுகிறார்கள்.

600 ரன்களுக்கு அதிகமாக அடிப்பேன்

கடந்த முறை ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்த நிதிஷ் ராணா பேசும்பொழுது “எல்லோருமே நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்கள். எல்லா வீரர்களும் இதை மனதில் வைத்திருப்பார்கள். நானும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற விரும்புகிறேன். ஆனால் இந்த நேரத்தில் என் மனதில் ஐபிஎல் மட்டுமே இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் என்னால் 600 ரன்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். இதையே நான் இலக்காக வைத்திருப்பேன்.

ஸ்டார்க் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவருடைய விலை அவரை எந்த விதத்திலும் பாதிக்காது. எங்களுக்கு டெத் பவுலர் இல்லாமல் இருந்தது. தற்பொழுது அந்த இடத்தை அவர் நிரப்பி இருக்கிறார். என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். எங்களுக்கு இந்த முறை மிக முக்கியமான வீரராக இருப்பார். மேலும் டி20 கிரிக்கெட்டில் எல்லா பந்துவீச்சாளர்களும் ரன்கள் கொடுப்போம் என்று தெரிந்துதான் செல்கிறார்கள். எனவே அவர் எதற்கும் தயாராகவே இருப்பார்.

- Advertisement -

எங்கள் அணியின் மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் அனுபவம் இல்லாதவர்கள். எனவே அவர்களால் இவருக்கு பக்க பலமாக இருக்க முடியாது. எங்களிடம் மூன்று தரமான சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதற்காக நாங்கள் வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்தவில்லை என்பது அர்த்தம் கிடையாது.

இதையும் படிங்க : ருதுராஜ் கூட தோனி இருக்கிறது பெரிய சுமை.. இந்த முடிவு சரி வராது – வாசிம் ஜாபர் வெளிப்படையான விமர்சனம்

ஸ்ரேயாஸ் அணிக்கு மீண்டும் திரும்ப வந்துவிட்டார். அவருக்கு தற்போது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் கேப்டனாக முன்னணியில் இருந்து அணியை வழிநடத்துவார். நான் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்த வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.